பக்கம்:இலக்கியக் கலை.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 இலக்கியக் கலை இல்லத்தரசியர் அறிவுறுத்தும் வாய்ப்பினைச் சில சமயங் களிலேயே பெறுவர். இலக்கியமோகாதலியின் கொஞ்சு மொழி போன்று இனிய, ஏற்புடைய சொற்களால், அறிவுரை கூறுவதில் தவறுவதில்லை. : . . . . " . . . தாயின்அன்பும், அருளுணர்வும் கடமைப்பற்றும், தன்னலமற்ற பண்பும் இலக்கியத்தில் இடம்பெறுவதன் மூலம், படிப்பவரை மனிதராக-மனிதநேயம் உடையவராக மனிதராக வளர்ந்து வாழ்வில் சிறக்க வழி காட்டுகிறது. மற்றும், தாயின் அன்பு எவ் வாறு பரந்துபட்டதோ அதைப் போன்று சிறந்த இலக்கியமும் குறுகிய மனப்பான்மையை அகற்றி, அனைத்துலகக் கண்ணோட் டத்தை-ஆன்மநேய ஒருமைப்பாட்டைப் போதிக்கும்பேராசானாக வீறுடன் விளங்குகிறது. - இதுவரையில், நாம் கண்ட "இலக்கியக் கடப்பாடுகள் யாவும் கீழ்த்திசை நாடுகளான இந்தியாவிலும், சீனாவிலும் ஈராயிரம். ஆண்டுகளுக்கு மேலாகப் போற்றிப் பின்பற்றப்பட்டு வரும் "இலக்கியக் கொள்கை யாகும். ஒரு நாணயத்தின் இருபக்கங்களைப் போல, இன்புறுத்துதலும் அறிவுறுத்துதலும் இணைந்தும் இழைந்தும் இலக்கியத்தில் இடம்பெற வேண்டும் என்பது நம் முன்னோர் கண்ட முடிவாகும். ஆனால், இவற்றுள் ஒன்றை மட்டும், சிறப்புமிகு-முதன்மை யான இலக்கியக் கடப்பாடாகக் கருதுவோர் பண்டைக் காலத் திலும் இருந்தனர்; இன்றும் இருக்கின்றனர். அவர்கள், யாதாகிலும் ஒர் எல்லைக்குச் சென்று, அதுதான் இலக்கியத்தின் கடப்பாடு' என வழக்காடுவர். - " ... . . . இந்த நிலை, கிரேக்கப் பேரறிஞன் பிளேட்டேர்காலத்திலேயே தோன்றிவிட்டது. அறவொழுக்கத்தை அடிப்படையாகக் கொண்டதே மனித வாழ்க்கை’ என்பதை முழுமையாக, நம்பியவர் பிளேட்டோ. எனவே, அவருடைய சிந்தனையில், இக்கருத்தே முனைப்பாகத் தோன்றலாயிற்று. - སྨན་ཁ་ལ་ཟ་ བ་ , கலையின் நோக்கம் யாதாக இருக்க்க்கூடும்?' என்பதைப் பற்றிப் பல கோணங்களில் சிந்தித்துப் பிளேட்டோ ஆராய்ந் o துள்ளார். - . '. بوده ه ---. .*, * : - - - கலைஞர்கள் அழகின் உண்மையரின் தத்துவத்தை அறிந்து, தகுந்த தூய்மையான சூழ்நிலையைப் படைத்துத் தேர்வ்ேண்டும்" என்பது பிளேட்டோவின் கருத்தாகும். ء’ . . . . . . . . ’’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/134&oldid=750941" இலிருந்து மீள்விக்கப்பட்டது