பக்கம்:இலக்கியக் கலை.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 18 : ". இலக்கியக் க்லை. பெருக்கின் மூலம் மனிதரின் உள்ளத்தில், உள்ள மாசுகள் மாய்ந்துவிடும். மர்சுமறுவற்ற மனம், அறவுணர்வின் பிறப்பிட மாக அமையும். இவ்வகையில் அவல நாடகம், மனித உள்ளத்தில் அறவுணர்வை ஊற்றெடுக்கச் செய்வதாகும் எனும் கருத்தினை அவர் வெளிப்படுத்தியுள்ளார். இங்குப் பேரளவிற்குத் தம் ஆசானுடைய எண்ணப் போக்கின் எதிரொலியையே, அரிஸ்டாடில் வெளிப்படுத்தியுள்ளார். - - எனவே, இவ்விரு கிரேக்கச் சிந்தனையாளர்களும் "இலக்கியத்தின் முதன்மையான கடப்பாடு அறவுணர்வை ஊட்டுவதே எனும் எண்ணப் போக்குடையவர்கள் என்பது தெளிவாகிறது. - * : o - ஹர்ரஸ் (Horace) எனும் ரோமானிய நாட்டு இலத்தின் மொழிப் புலவர் (கி. மு. 636), கவிதையை அனுபவிப்பத்ற்கு. சுவைப்பதற்கு உரிய நெறிமுறைகளைத் தம் கவிதைக் கலை’ (Arts Poetical) எனும் நூலில், வகுத்துத் தந்துள்ளார். தொல் காப்பியர்க்றும் வனப்பு’ எனும் இலக்கியப் பண்பின் சாயல் உடையதாக இவருடைய கருத்து விளங்குகிறது. முதன் முதலாக இலக்கியத்தில் தகவுப் பொருத்தம் அமைய வேண்டும் எனும் கருத்தை இவர் எடுத்துரைத்துள்ளார். இவரும், "கவிதையின் நோக்கம் ஓர் இன்பவாயிலாக அறவுணர்வை வழங்குவதே" எனும் கருத்துடையவராகவே க்ாணப்படுகிறார். ' இவருடைய இலக்கியக் கொள்கையின் ஒரு புதுமையை நாம் கர்ண்கிறோம். இலக்கியம் இன்புறுத்துவதாகவும் இருக்க வேண்டும் என்பது பண்டைச் செம்மை இலக்கிய (Classical) நெறியாளர்.(Classicist) சிந்தனையில் தோன்றிய புதுமையாகும். ஹாரஸ், இந்தக் கருத்தோடு நின்றுவிடவில்லை. இலக்கியம் இன்புறுத்துவதோடு அறவுணர்வைக் கிளர்ந்து எழச் செய்வதாகவும் அமையவேண்டும் என்பதை உடன் சேர்த்தே கூறுகிறார். இதனால், ஒர் உண்மை புலனாகிறது. இலக்கியம் இன்புறுத்துவதோடு, அறத்தைப் போதிப்பதாகவும் இருக்க வேண்டும் என்பதே அவ்வுண்மை இவ்வகையில், ஹாரஸ், இந்திய நாட்டு இலக்கியச் சிந்தனையாளர்களின் நோக்கினைக் கொண்டவராகக் காட்சி தருகிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/136&oldid=750943" இலிருந்து மீள்விக்கப்பட்டது