பக்கம்:இலக்கியக் கலை.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்: 10 இலக்கியத் தோற்றம் பற்றிய கொள்கை சென்ற நூற்றாண்டில், அறிவியல் துறையில், டார்வி (Darwin)னுடைய சிந்தனை, புதியதோர் எழுச்சியை உண்டாக் கியது. அவருடைய கொள்கையை அறிவியல் ஆராய்ச்சிக்குப் பயன்படுத்துவதோடு அமையாமல், அறிவுத் துறைகள் பல வற்றோடு பொருத்திப் பார்க்க அறிஞர்கள் முயன்றனர். இதன் விளைவாக மொழித்துறையிலும், இலக்கியத்துறையிலும் பல புதிய சிந்தனைகள் தோன்றின. அவற்றுள் ஒன்றே இலக்கியத்தின் தோற்றம் பற்றிய கொள்கையாகும். பன்னெடுங் காலமாகத் தத்துவ ஞானிகளும், இலக்கியச் சிந்தனையாளர்களும் இலக்கியத்தின் தோற்றம், இயல்பு, பண்பு' பயன் முதலியவற்றைப்பற்றித் தனித்தனியே, நுட்பமான கருத்துகள் பலவற்றைத் தெரிவித்துள்ளனர். அவற்றை எல்லாம் ஒருங்கு திரட்டி முறைப்படுத்தி, டார்வினுடைய சிந்தனை ஒளியில் இலக்கியக் கொள்கை' எனும் தலைப்பில், புதுப்பொலிவு பெற்று விளங்குமாறு, இந்நூற்றாண்டின் முற்பகுதியில் எப்ராம்ஸ் (Abrams) எனும் அறிஞர் செய்துள்ளார்." அவர் வகுத்துக் கர்ட்டும் இலக்கியத்தின் தோற்றம், பற்றிய கொள்கைகளை இனிக் காண்போம், 1. The Mirror and the Lamp PP. 1-40 அவை: (1) அகத்தெழுச்சிக் கொள்கை (Inspirational Theory) (2) உறுப்பியக் கொள்கை (Organic Theory) (3) அறிவியல் கொள்கை (Ethical Theory) (4) அழகியல் அல்லது முருகியல் கொள்கை (Aesthetic Theory) (5) சமுதாயக் கொள்கை . - (Sociological Theory); , என்பனவாகும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/138&oldid=750945" இலிருந்து மீள்விக்கப்பட்டது