பக்கம்:இலக்கியக் கலை.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியத் தோற்றம் பற்றிய கொள்கை 123 "மற்றும், செய்யுள் உறுப்பு ஈண்டு ஒதினார். செய்யுள் யாண்டு ஒதுபவெனின், அறியாது கடாயினாய். உறுப்பு என்பன உறுப்புடைப் பொருளின் வேறு எண்ணப்படா; பொருள் எனப்படுவன உறுப்பே. அவற்றது ஈட்டத்தினை முதலென வழங்குபவாகலான், உறுப்பினையே சொல்லி. ஒழிந்தார். முதற்பொருளது இலக்கணமென உறுப்பு, இலக்கணத்தையே வேறுபடுத்துக் கூறலாவது இல்லையானும், உறுப்புரைப்பவே, அவ்வுறுப்புடைய பொருள் வழக்கியலால் பெறலாம். ஆதலாலும், என்பது. இவற்றை உயிர் உடையதன் உறுப்பைப் போலக் கொளின், உயிர் வேறு கூறல் வேண்டுவதாம். அவ்வாறு கூறாமையின், கலவை உறுப்புப் போலக் கொள்க' ே - - என்பது பேராசிரியர் தந்துள்ள விளக்கமாகும். G.தால்காப்பியனார் காட்டும் இந்த ஒளியினைக் கொண்டு சிங்கப் பர்டல்களைக் காண்போம், அப்பாடல்களில், இக்கொள்கை யின் முழுமையான செயற்பாடு வெளிப்படுகிறது. இத்தகைய முறையில், இலக்கியம் படைப்பதற்குப் பயிற்சியும், மரபுகளைப் போற்றிப் பின்பற்றும் பழக்கமும் தேவைப்படுகின்றன. உறுப்பியல் கொள்கையின் சிறப்பியல்பு ஒன்றை நாம் இங்குக் கருத வேண்டும். பாடுவோர், கேட்போர், பாடுபொருள், வடிவம், அறிவு உணர்ச்சி, உண்மை - கற்பனை, அழகு - பயன்பாடு; குறிக்கோளியல்பு நடைமுறை முதலியவற்றின் இடையே இசைவும் இணக்கமும் இணைந்துள்ளமையேயாகும். . . . . . . . இலக்கியத் தோற்றம் பற்றிய பிற கொள்கைகள், யாதாகிலும் ஒரு வகையில், மேற்கண்ட இணைகளில், யாதாவது ஒன்றை மட்டும் முதன்மைப்படுத்துவனவாக அமையும். இந்தப் பிளவுபட்ட நேர்க்கு, சமுதாயத்தில் நில வும் முரண்பாட்டைப் பிரதிபலிப்பதாகும். எனவே, உறுப்பியக் கொள்கையின் உயிர்ப்பாக இருப்பது இசைவிணக்கமாகும். இந்த நோக்கில் உலக இல்க்கியங்களைத் திறனாய்வு செய்தால், பல அரிய உண்மைகளை அறிய வாய்ப்புகள் கிடைக்கக் கூடும் எனத் தோன்றுகிறது. - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/141&oldid=750949" இலிருந்து மீள்விக்கப்பட்டது