பக்கம்:இலக்கியக் கலை.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியத் தோற்றம் பற்றிய கொள்கை 129 காலச் சூழல்களுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப, மனித சிந்தனையின் போக்கு மாறுகிறது; வளர்ச்சியுறுகிறது. அச்சமயங்களில் பழைய கொள்கைகளுள் ஒரு சிறு கூறாக இருந்த இயல்பு, பெருவாழ்வு பெறத் தொடங்குகிறது. இவ்வாறு, அகத்தெழுச்சிக் கொள்கை, உறுப்பியல் கொள்கை, அறவியல் கொள்கை, அழகியல் கொள்கை என்பவை தோன்றி வளர்ந் துள்ளன. ஆனால், அவை ஒவ்வெர்ன்றும் குறிப்பிட்ட காலத்திலேயே, முதன்மை வாய்ந்தனவாக விளங்கின. காலத்தின் நோக்கிற்கும் போக்கிற்கும் ஏற்ப, அவை முதன்மை இடத்தை இழக்கின்றன. அடுத்துத் தோன்றும் புதிய கொள்கை’, முந்தைய தன் இடத்தைப் பிடித்துக்கொள்ளுகிறது. இதனால், பழைய கொள்கைகள் அடியோடு அழிந்துவிட்டன என்பது பொருளன்று. நாகரிக வளர்ச்சியின் முதற் படிநிலையில், அகத்தெழுச்சிக் கொள்கை அரசோச்சியது அதையடுத்து உறுப்பியல் கொள்கை' தலை தூக்கியது; நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்பின் முற்பகுதியில் உறுப்பியல் கொள்கை (மன்னனாகிய முதற் பொருளை - உறுப்பை மையமாகக் கொண்டு) தோன்றியது. நிலப்பிரபுத்துவ சமுதாயத்தினருக்கு உறுதுணையாகச் சமய வாதிகள் செல்வாக்குப் பெற்ற பொழுது, அறவியல் கொள்கை' அரும்பியது. - நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்பு சிதைவுறுவதற்குக் காரணமான வாணிகப் பொருளாதார சமுதாய அமைப்புக் கர்ல்கொள்ளத் தொடங்கியதன் விளைவர்கச், செல்வச் சீமான் களின் சிந்தனைத் தொட்டிலிலே, அழகியற் கொள்கை' சீராட்டிப் பாராட்டி வளர்க்கப்பட்டது. . இயந்திரத் தொழில்மய சமுதாய அமைப்பு உருவாகிவிட்ட இந்தக் காலத்தில், முந்தைய கொள்கையின் எதிர் விளைவாக சமுதாயக் கொள்கை திடுமெனத் தோன்றியது மிகக் குறுகிய காலத்தில், மனித வாழ்வின் எல்லாப் பகுதிகளையும் இது ஆட்டிப் படைக்கிறது. - படைப்பாளிகள், தாங்கள் மக்கள் சமுதாயத்தில் இருந்து வேறுபட்டவர்கள் எனவும், உயர்ந்தவர்கள் எனவும் கருதிக் கொண்டு தங்கக் கோபுரங்களில் அமர்ந்து கற்பனை உலகில் மிதந்துகொண்டு இருந்த காலகட்டத்தில், அழகியற்கொள்கை' ஆதிக்கம் செலுத்தியது. இ. -9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/147&oldid=750955" இலிருந்து மீள்விக்கப்பட்டது