பக்கம்:இலக்கியக் கலை.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 - இலக்கியக் கலை அக்கால கட்டத்தில் சாமானிய மனிதனும், அவனுடைய உணர்வுகளும் புறக்கணிக்கப்பட்டன; நடப்பியல் நிலைமைகள் மறக்கப்பட்டன அல்லது மறைக்கப்பட்டன. 'படைப்பாளனும் மனிதனே அவனும் இந்த மனித சமுதாயக் கடலில் ஒருவனே! எனும் எண்ணம் எழாத நிலையில், சமுதாயத்தின் மேல்தட்டைச் சேர்ந்த மேட்டுக்குடி மக்களின் உளவியல்டே, கலைப் படைப்பு களைக் கறைபடுமாறு செய்தன. * . . இந்த அவல நிலையை மாற்றி அமைக்கும் நிலையில் 'கடையவனுக்கும் கலையைச் சுவைக்க அனுபவிக்க உரிமை உண்டு” எனும் புத்துலகச் சிந்தனையைப் பறைசாற்றும் வகையில் தோன்றியதே, சமுதாயக் கொள்கை'யாகும். - இக் கொள்கை, இலக்கியப் படைப்பாளனைத் தன்னுரிமை' வாய்ந்த தனிப்பிறவியாகக் கருதவில்லை. இந்த நூற்றாண்டில் தோன்றிய எல்லா வகையான அறிவுத் துறைகளும், இயக்கங்களும், தொழில் நுட்ப முன்னேற்றங்களும் அவனைத் தாக்குகின்றன. இன்றைய மனித சமுதாயத்தின் பிடியில் இருந்து, தப்பியோடி, தனியே அவனால் இனி வாழ இயலாது. யாராகிலும் இவ்வாறு வாழ முயன்றால் அவனுடைய முகவரியே மறைந்துபோய்விடும். கலை, இலக்கியக் கொள்கைகளின் வழி, சமுதாயக் கொள்கை இவப்படுத்போது, அது மெய்ம்மை (Realism) து பெயரைப் பெறுகிறது. இதனை மார்க்கிய வாதிகள், 'யதார்த்த வாதம் எனும் பெயரால் சுட்டுவர். அறவுணர்வின் வெளிப்பாடு, கவர்ச்சிமிகு அழகியற் காட்சி எனப் பலவாறாக மனித அனுபவத்தைத் துண்டு துண் டா த க் சிதைத்துவிடாமல், மனிதனுக்குரிய எதையும் புறக்கணிக்காமல், அனைத்தையும் ஒருங்கு அணைத்தவண்ணம், சிறப்பாகவும் வாழ்வதற்குத் தேவை யான இலக்கியத்தை, நடப்பியல் மெய்ம்மைய நிலையில் இருந்து சிறிதும் பிறழாமல், படைக்க வேண்டும் என்பதே இக் கொள்கை யின் நோக்கமாகும். . . . . . ; இதன் விளைவாகக் கவிதை மட்டும் அல்லாமல், உரை இடையில் இயற்றப்படும் சிறுகதை, புதினம், நாடகம் போன்ற இன்றைய இலக்கியத் துறைகளும் புத்தம் புதிய உள்ளடக்கத்தை ம், கலைத் திறன்களை யும் வெளிப்படுத்திய வண்ணம் விரைந்து ளர்ந்து வருகின்றன. - . . . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/148&oldid=750956" இலிருந்து மீள்விக்கப்பட்டது