பக்கம்:இலக்கியக் கலை.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியத் தோற்றம் பற்றிய கொள்கை 131. புதுமையைக் கட்டியங் கூறி வரவேற்ற சுப்பிரமணிய பாரதியார், மக்கள் சமுதாயத்திற்குப் பயன்படத்தக்க இலக்கியத்தைப் பட்ைப்பதற்கு ஒரு வரைபடத்தையே வரைந் துள்ளார்: "எளிய பதங்கள். எளிய நடை.எளிதில் அறிந்து கொள்ளக் கூடிய சந்தம். பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினை யுடைய காவியமொன்று தற்காலத்தில் செய்து தருவோன், நமது தாய் மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகின்றான். ஒரிரண்டு வருஷத்து நூற்பழக்கமுள்ள தமிழ் மக்கள் எல்லோருக்கும் நன்கு பொருள் விளங்கும்படி எழுதுவதுடன், காவியத்துக்குள்ள நயங்கள் குறைவு படாமலும் நடத்துதல் வேண்டும்' என்பது அவருடைய வேண்டுகோளர்கும். பாரதியாரின் இந்த இலக்கியக் கொள்கையின் முதற் பகுதி யாகத் 'தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகின்றான்' என்பது வரையில் கூறப்பட்டுள்ள கருத்துகள், நாம் மேலே கண்ட நான்கு வகையான இலக்கியத் தோற்றம் பற்றிய கொள்கைகளோடு நெருக்கமான தொடர்புடையன. - - இக் கொள்கையின் பிற்பகுதியில், பாரதியார் “தமிழ் மக்கள் எல்லோருக்கும்' என்று வரையறுத்துக் கூறியுள்ளமை, அவருடைய சமுதாய நல நாட்டத்தையே வெளிப்படுத்துகிறது. இதைப் போன்றே, 'நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்கு உழைத்தல்' எனப்பாடும் இடத்தும், சமுதாய உணர்வே பொங்கி வழிகிறது. இவ்வாறு, பாரதியார் முதல் வளர்ந்து வந்துள்ள தமிழ் 'மறுமலர்ச்சிக் கவிஞர்களின் மரபு’, சமுதாயக் கொள்கையின் பேராற்றலைப் புலப்படுத்துவதைக் காணலாம். புதுமைக் கவிஞர்களும், கதையாசிரியர்களும், புதினப் படைப்பாளர்களும், இன்று சமுதாயத் தன்னுணர்வு வாய்ந்த இலக்கியங்களையே படைத்து வருகின்றனர். இலக்கியத்தின் தோற்றத்திற்குக் காரணமாக உள்ள உந்துதல் சக்திகளைப்பற்றி முன்னரே கண்டோம். இவ்வியலில், கடந்த ஈராயிரத்தைந்நூறு ஆண்டுகளாக வளர்ந்துவந்துள்ள இலக்கியம், எவ்வெக் காலகட்டத்தில் எவ்வெவ்வாறு தோன்றியுள்ளன என்பது கோடி காட்டப்பட்டுள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/149&oldid=750957" இலிருந்து மீள்விக்கப்பட்டது