பக்கம்:இலக்கியக் கலை.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 இலக்கியக் கலை தமிழ்நாட்டில் தோன்றவில்லை என்று கூறுவதே சிறந்தது எனத் தோன்றுகிறது. சங்கம் திகழ்ந்த காரணத்தாலும், சங்கப்புலவர் கள் சிறந்த திறனாய்வாளராக இருந்து, தமக்கு முன் கூறப்படும் கவிதைகளின் குறைவு நிறைவு கண்டு கூறினமையாலும், தனிப் பட்ட திறனாய்வு நூல்கள் தோன்றவில்லை போலும்! இறைவன் பாடலுக்குக் கீரன் பிழை கற்பித்தது இக்கருத்தை வலியுறுத்து கிறது. முடிவு கூறும் இயல்பும், குறைவு நிறைவு கூறும் இயல்பும் படைத்த திறனாய்வு நூல்கள் இல்லையே தவிர தமிழ் இலக்கியங்கள் பலவற்றிற்குப் பேருரைகள் தோன்றியுள்ளன. தவறு காணாத இயல்பையுடையனவாயினும், இவை, நிறைவை நன்கு எடுத்துக் கூறுபவை. - சிறந்ததான செய்யுளியல் வகுத்த தொல்காப்பியனாரும், தனிப்பட்ட கவிதைகள் எவ்வாறு அமைகின்றன என்று இலக்கணம் வகுத்தாரேயன்றி, இலக்கியம் எத்தனை வகைப்படும் என்று விரிவாக ஒன்றும் கூறவில்லை. தனிப்பட்ட கவிதை புனைவதே பெருவழக்காய் அப்பொழுது இருந்திருக்கும் போலும். தொல்காப்பியர் காலத்திற்குப் பிற்பட்டெழுந்த இலக்கணமும் இவ்வரையறை செய்யாதது விந்தையே! ஆனால், மிகப் பிற்காலத்தில் எழுந்த இலக்கண விளக்கம் போன்ற நூல்கள் காப்பிய இலக்கணம் முதலியன வகுத்துள்ளன. அவையும் திறனாய்வு கூறும் நூல் பற்றி ஒன்றுங் கூறவில்லை எனவே, அத்தகைய நூல்கள் ஒன்றும் தமிழில் தோன்றவில்லை என்றே முடிவு செய்தல் வேண்டும். தகுதியுடைய நூல்கள். தோன்றினால் அதனைப் போற்றுவதும், தகுதியற்ற நூல்கள் தோன்றினால், அவை தாமாக மடியும்ாறு விட்டுவிடுதலும் தமிழ் மரபாக இருந்து வந்தது போலும் தகுதியுடைய நூல்கள் பல இருக்கின்றனவே, அவற்றை ஒப்புநோக்கிக் குறைவு, நிறைவு கூறும் நூல்கள் ஏன் தோன்றவில்லை என்ற ஐயம் சில சமயம் பிறக்கத்தான் செய்கிறது. தமிழனுடைய வாழ்க்கையையும். இலக்கியத்தையும், இலக்கணத் தையும் நன்கு கவனித்தால் இதற்கும் ஒரு விடை கிடைக்கிறது: வாழ்க்கையிலே அன்றி, இலக்கியத்திலுங்கூடத் தமிழன், பெரி யோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/152&oldid=750961" இலிருந்து மீள்விக்கப்பட்டது