பக்கம்:இலக்கியக் கலை.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறனாய்வாளறு யார்? - 137 முறை ஓர் இலக்கியத்தைக் கற்றாலொழிய் அதனை முழுதும் அனுபவித்தல் இயலாது. மேலும் அதற்கேற்ற மன நிலையும், ஆற்றலும் வேண்டியிருக்கிறது. அத்தகைய நிலையில் பேரறிவாளன் ஒருவன் இயற்றிய திறனாய்வு நூல்: இலக்கியத்தை நன்கு அறிந்துகொள்ளப் பயன்படுகிறது. உதாரணமாக வ. வே. சு. ஐயரவர்களின் கம்பராமாயண ரசனை: ன்ன்ற திறனாய்வு நூல்; பல முறை நாம் கம்பனைக் கற்றாலும் அறிய இயலாத அரும் பொருள்களை நமக்கு வழங்குகிறது. நமக்காகத் இறனாய்வாளன் இலக்கியத்தில் புகுந்து அதன் சுவையான பகுதிகளை எடுத்துத் தருகிறான். ஆதலால் அத்தகைய திறனாய்வு நூல்கள் பெரிதும் வேண்டியனவேயாகும். அதுவும் நம் தமிழ்மொழியின் இன்றைய நிலையில் பெரிதும் வேண்டப் படுகிற ஒர் இலக்கியப் பகுதியாகும் இது, - போலி நூல்கள்: இவ்வாறு கூறியவுடன் எல்லாரும் திறனாய்வு நூல்கள் எழுதவும். கற்கவும் தொடங்கிவிடுதல் ஏற்றதன்று. இதன் இன்றியமையாமையை அறிவதுடன் இதனால் ஏற்படும். அதாவது தவறாகப் பயன்படுத்தினால் ஏற்படும். தீமையையும் அறிதல் வேண்டும். இலக்கியத்திற்குத் திறனாய்வு செய்கிறவன், அவ்விலக்கியத்தை ஆர்வத்துடனும் நடுவுநிலைமையுடனும் கற்பவனாக இருத்தல்வ்ேண்டும். அவ்வாறு இன்றேல் அவன் இலக்கியத்தின் உயிர்நாடியை அறியாமற் போவதுடன், தனது திறனாய்வைக் கற்பவர்களும் மூலவிலக்கியத்தைப் பிறழ உணருமாறு செய்து விடுகிறான். மேலும், அவன் சிறந்த எழுத்தாளனாகவும் இருந்துவிடுவானேல் விளையும் இன்னல் கொஞ்சமன்று! அத்தகையவன் தனது வன்மையால், தான் கொண்ட தவறான கருத்தை நாமும் சரி என்று நின்ையுமாறு செய்துவிடுவான். பொய்யுடை ஒருவன் சொல்வன்மையினால் மெய்போலும்மே, மெம்போலும்மே என்ற பழைய தமிழ்மொழி எத்தனை தடவை உண்மையாதலை வாழ்க்கையில் காண்கிறோம்! இத்தகைய திறனாய்வாளன் எழுதிய நூலைக் கற்குந்தோறும், அவனுடைய வாக்குவன்மையின் எதிரே நாம் தலைகுனிய நேரிடுகிறது. அவ் விலக்கியத்தை முன்னரே அறிந்தவர்கள்கூட. இத்திறனாய்வாளனின் வாக்குவன்மை என்ற வலையிற் சிக்கிக் கொள்வதைக் காண்கிறோம். அவ்வாறிருக்க, இலக்கியத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/155&oldid=750964" இலிருந்து மீள்விக்கப்பட்டது