பக்கம்:இலக்கியக் கலை.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 இலக்கியக் கலை ஒரு முறையேனும் கல்லாதவர்கள், இத்திறனாய்வு நூலைக் காண நேர்ந்தால் அவர்கள் மூல இலக்கியத்தைப்பற்றிக் கொள்ளுங் கருத்தைக் கூறத் தேவை இல்லை! தம் வன்மையால் கற்பவரி மனத்தைக் கெளவி, இறுதியில், தம் முடிவைக் கற்பவர்க்கு ஏற்றிவிடும் இயல்பு வாய்ந்த இவர்கள் திறனாய்வாளரும் அல்லர்: அவர்கள் நூல்கள் எவ்வளவு போற்றப்படினும் திறனாய்வுநூல் களும் அல்ல. இத்தகைய நூல்களைக் கற்றபின்னர் எப்போ தேனும் அவ்விலக்கியத்தையே கற்க நேர்ந்தாலும் செம்மையான மனத்துடன் கற்றல் இயலாது. திறனாய்வாளன் என்ன கண் கொண்டு அவ் விலக்கியத்தைக் கண்டானோ அதே கண்ணுடன் தான் அப்பொழுது நாமும் இலக்கியத்தைக் காணமுடியும்: அவன் கண்ட கருத்துக்கள் தவிர ஏனைய நம் கண்ணில் படர். அவன் காணாதுவிட்ட கருத்துக்களும், பிறழ உணர்ந்த கருத்துக்களும் அப்படியே நமக்கும் தோன்றுமே தவிர வேறு வழி இல்லை. திறனாய்வாளனாகிய அவன், நூலை நாம் நன்கு அறிய உதவாமல், தவறாக உணர வழிசெய்து விட்டு இலக்கியத்தை ஆக்கியவனுடைய மனநிலையை நர்ம் அறியமுடியாமலும் செய்கிறான். அரசியல் முதலான காரணங்களால் இத்தகைய 'திறனாய்வு நூல்கள் எழுதி நம்மை ஏமாற்றும் இப்போலித் திறனாய்வாளர்கள் பலரும் தாங்கள் கூறவந்த இலக்கியத்தை நன்கு கற்காமலே திறனாய்வு செய்வது மட்டுமன்று, அவர்கள் யாரைப்பற்றி எழுதினாலும் எழுதப்பட்ட கவிஞனைப்பற்றி ஒன்றுகூடக் கூறுவதில்லை. கவிஞன் பெருந் தீங்கை இழைத்து விட்டான் என்று கூறவரும் இவர்கள் தங்கள் திறமையைக் காட்ட வருகிறார்களேயன்றி வேறு இல்லை. பாவம் தங்கள் திறமையைக் காட்டமட்டும் கம்பனைப் பயன்படுத்தும் இத் திறனாய்வாளர் உண்மையில் அவன் நூலை நேர்மையுடன் ஒரு முறை படித்தாலும் இத்தகைய தவற்றைச் செய்ய மாட்டார்கள்: இவர்கள் ஒருபுறம் இருக்கப் பழங் காலத்தில்கூட இத்தவறு ஓரளவு ஏற்படாமல் இல்லை. பரி மேலழகர் போன்ற சிறந்த உரையாசிரியரும் திறனாய்வாள ருங்கூட ஆங்காங்கே தம் கருத்தைக் குறளில் ஏற்றியதால் பிற்காலத்தார் பலரும் அவரது வன்மைக்கெதிரே தலை சாய்த்து அக் கருத்துக்களை ஒத்துக்கொண்டனர். தமிழ் மொழியினிடத்துச் சிறந்த அன்பு பூண்டு வேறு பயன் . கருதாமல் திறனாய்வு செய்த அவர்களே, தம்மையுமறியாமல் இத்தகைய இடர்ப்பாட்டை விளைவிப்பராயின், இக்கால

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/156&oldid=750965" இலிருந்து மீள்விக்கப்பட்டது