பக்கம்:இலக்கியக் கலை.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் 12 திறனாய்வும் - வகைகளும் பிழை வேட்டை திறனாய்வு என்றால் என்ன? தற்காலத்தில் இச் சொல்லின் பொருள் நன்கு அறியப்படாவிட்டாலும் திறனாய்வு செய்பவர் பலருண்டு. நம்மைப் போன்ற சாதாரண மக்களும் திறனாய்வு' என்று கூறினவுடன் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக ஒரு பொருளை அல்லது இலக்கியத்தைச் செய்பவர் என்றே கருதுகிறோம். திறனாய்வில் ஒரளவு முடிபு கூறும் இயல்பும் அமைந்திருப்பினும் ஒன்றை நல்லது என்றோ கெட்டது என்றோ கூறினால்தான் அது திறனாய்வாகும் என்று கருதுவது தவறு. ஏதாவவொரு நூலை எடுத்துக்கொண்டு சொற்கள், வாக்கிய அமைப்பு முதலியவற்றில் உள்ள குறைபாடுகளை வரிசைப்படுத்தி இது தவறு. இது பொருத்தமற்றது என்று காட்டுவதுதான் திறனாய்வு என்று யாரும் கருதத் தேவை இல்லை. கம்பநாடனும், தவறும் இடங்கள் உண்டு. ஆனால் அத் தவறுகளை வரிசைப் படுத்திவிடுவதால் கம்பராமாயணத்தைத் திறனாய்வு செய்து விட்ட்தாக நின்னப்பதும் பெரும்பிழை. கம்பனைப் போலப் பெருங்காப்பியம் ஆக்கக் கூடியவர் இத்தகைய பிழைகள் செய்வதால் தவறில்லை. ஆனால் சாதாரணச் செய்யுள் எழுதுபவர் ஒருவேளை கம்பன் செய்ததாகக் கருதப்படும் பிழையைத் தாம் செய்யாமல் இருந்திருக்கலாம். எனினும் அவன் பெருமையும் இவர்களிடம் இல்லை என்பதை மறத்தல் வேண்டா. 'கான முயல் எய்த அம்பினில் யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது என்ற குறளைத் திறனாய்வுக்கு முற்றிலும் பொருத்தமானதாகவே கொள்ளவேண்டும். . . . . . . . .", - - (తిarుత అ49ఖ ఒ*9, 7ఖ ఇuతdu இன்றியமையாதது. பழந்தமிழ் இலக்கியங்க ட்கு உரை எழுதிய பெருமக்கள் அனைவரும் திறனாய்வாளர்களே என்றாலும் ஒரு நூலையாவது அவர்கள் மட்டமானது என்றோ, பிழைகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/159&oldid=750968" இலிருந்து மீள்விக்கப்பட்டது