பக்கம்:இலக்கியக் கலை.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14e இலக்கியக் 3sଶନ ବ} மலிந்துள்ளவை என்றோ எடுத்துக்காட்டாமல் விட்டதும் அறிய வேண்டுவதாகும். இலக்கியத்தில் காணப்பெறும் இன்பத்தை ஆழ்ந்து அநுபவிக்கக் கூடிய இவ்வுரையாசிரியர்கள் அவற்றில் ஒரோவழிக் காணப்பெறும் பிழையையும் அறியாமல் இரார் எனினும், அப் பிழைகளைக் கோவைப்படுத்திக் காட்டுவதே தமது தொழில் என அவர்கள் நினைத்தார்களில்லை. திறனாய்வாளன் வேலை அவ்வாறாயின் திறனாய்வின் வேலைதான் என்ன? திறனாய்வு மிகக் கடினமானதும் மிகப் பெரியதும் ஆன ஒரு செயலாகும். எடுத்துக்கொண்ட இலக்கியத்தின் உயிர்நாடி எது எனக் கண்டு அதனை ஏனைய சாதாரணப் பகுதிகளிலிருந்து பிரித்து எடுத்தல் வேண்டும். எந்த ஒரு நூலிலும் நிலைபேறுடைய பகுதிகளும் அக்காலத்திற்கு மட்டும் உரிய பகுதிகளும் கலந்திருக்குமன்றோ? லெப்பதிகாரம் போன்ற பெருங்காப்பியத்திலும் மதுரை மாநகர வருணனை, காவிரிப்பூம்பட்டின அங்காடிச் சிறப்பு முதலிய பகுதிகள் உண்டு, இவை நூல் தோன்றிய ஒரு நூற்றாண்டின் பின்னர்கூட அநுபவிக்க முடியாதபடி மாறுந் தன்மையுடையவை. ஆனால் அந்நூல் கூறவந்த மூன்று நீதிகள் என்றும் நிலைபெறும் இயல்புடையவை. இவ் வேறுபாட்டை நன்கு அறிந்து நிலைபேறுடைய பகுதிகளைத் திறனாய்வாளன் பிரித்து எடுத்தல் வேண்டும். நிலைபேறுடைய இப்பகுதியைப் பிரித்துக் கோவை செய்து அதனுடைய முழு அழகும் வெளிப்படும் முறையில் அமைத்தல் வேண்டும். இப் பகுதியில் கவிஞன் கையாண்ட கலைச் சிறப்பு, அறிவூட்டல் முதலியவற்றை நன்கு காட்டல் வேண்டும். இக் கலைச்சிறப்பும், அறிவூட்டலும் கலைஞன் வேண்டுமென்றே இங்குப் பெய்து வைத்திருக்கலாம். இன்றேல் அவனுடைய பேராற்றல் காரணமாக அவனையும் அறியாமல் இச் சிறப்புத் தோன்றி இருக்கலாம். எவ்வாறாயினும் இப் பகுதியை எடுத்து நாம் அநுபவிக்குமாறு தருதல் திறனாய்வின் தலையாய கடமையாகும். இங்கனம் அதன் அழகையும், அவ்வழகின் மூலத்தையும் எடுத்து விளக்கி, பிரித்து அவ்விலக்கியம் எத்தகையது எனக் குறிப்பதே திறனாய்வாகும். பத்தாயிரம் பாடல்கட்கு மேலுள்ள ஒரு பெரும் நூலிலிருந்து சில பாடல்களைப் பொறுக்கி எடுத்து வரிசைப்படுத்தி இதுவே கவிஞனின் பண்பு என்று காட்டுவது அனைவரும் செயயக்கூடிய எளிய செயல்தான். ஆனால் இவ்வரிசையில் கவிஞனின் சிலப்பை வெளியிடுவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/160&oldid=750970" இலிருந்து மீள்விக்கப்பட்டது