பக்கம்:இலக்கியக் கலை.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- தி றனாய்வும்-வகைகளும் 143 ஆனால் இவ்வரிசையில் க வி ஞ ன் சிறப்பை வெளியிடுவது மேதையின் வேலை. கவிஞனின் மட்டமான மனநிலையை வெளி யிடுவது பேதையின் வேலை. திறனாய்வைப்பற்றி டாக்டர் ஜான்ஸன் என்ற மேனாட்டு அறிஞர் கூறும் சொற்கள் அறிந்து மகிழ்தற்குரியவை: * திறனாய்வு' என்பவள் முயற்சி உண்மை’ என்ற இருவருக்கும் தோன்றிய முதல்மகள். பிறந்தவுடன் இப்பெண் நடுவுநிலைமை என்னும் தாதியர்ல் மெய்யறிவு என்னும் அரண்மனையில் வளர்க்கப் பெற்றாள். இளமையிலேயே இவள்பர்ல் காணப்பெற்ற சிறப் பியல்புகள் காரணமாக இவள் கற்பனை என்பவளுக்குத் துணைவியாக அமைந்தாள். முடிபுமுறைத் திறனாய்வு இலக்கியத் திறனாய்வு பலவகைப்படுமேனும் அவற்றுள் சிறந்த இரண்டு, முடியுமுறைத் திறனாய்வும், செலுத்துநிலை அல்லது 'விதிமுறைத் திறனாய்வும் ஆம். இவற்றுள் முன்னதைப் பற்றிக் காண்போம். இப்பெயரே, பொருளின் உட்கோளை ஒருவாறு விளக்குகிறது. முடிபு கூற வேண்டுமாயின், இரண்டு வேறுபட்ட பொருள்கள் வேண்டும் அவற்றைப்பற்றி ஆராய்ந்து உயர்வு தாழ்வுகளை ஒப்பிட்டுப் பின்னர்த்தானே முடிபுகூற முடியும்? ஆராய எடுத்துக்கொண்ட இரு பொருள்களும் ஒத்த பகுதிகள் சிலவற்றையேனும் பொதுப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். இட்டளி சிறந்ததா, தோசை சிறந்ததா என்று ஆராயலாமே தவிர, இட்டளி சிறந்ததா, நாற்காலி சிறந்ததா என்று ஆராய்தல் இயலாது. ஏனெனில் இட்டளிக்கும், தோசைக்கும் பொதுத்தன்மை உண்டு. ஆனால் இட்டளிக்கும் நாற்காலிக்கும் பொதுத்தன்மை என்ற ஒன்றும் இல்லை. அதேபோல இலக்கியத்திலும் திறனாய்வு செய்யப் புகுந்தவன் பொதுத்தன்மையுடைய இரு இலக்கியங்களை எடுத்துக்கொண்டு திறன்ாய்வு செய்தல் வேண்டும். இம்முறை மேனாட்டில் பெரிதும் கையாளப்பெற்ற முறையாகும். நம் நாட்டில் இம்முறையே இல்லை என்றுகூடக் கூறிவிடலாம். காரணம், முன்னர்க் கூறியது போல எதையும் புகழவும், இகழவும் கூடாது எனத் தமிழன் கொண்டிருந்த எண்ணமாகவே இருக்கலாம், - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/161&oldid=750971" இலிருந்து மீள்விக்கப்பட்டது