பக்கம்:இலக்கியக் கலை.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 இலக்கியக் கலை ஒன்று உண்டு. தொல்காப்பியம் கூறிய இலக்கணத்திற்கு மாறு ப்ட்டுப்போனால் இலக்கியத்தை யாரேனும் குறைத்து மதித்துவிடு வார்களோ என்ற அச்சத்தால்தான் இவ்வாறு செய்ய முயன்றனர். தமிழ்க்காப்பிய முறை ஆனால், மேனாடுகளில் இருந்த மற்றொரு கருத்து இங்கு நிலவவில்லை என்பது அறியத்தக்கது. ஆங்கில மொழியில் தோன்றிய பெரிய காப்பியங்கள் அனைத்தும் ஒன்றை ஒன்று அடியொற்றியே தோன்றின. அடிப்படையில் மாறுபாடுகள் அதிகம் தோன்றவில்லை. அதனாலேயே அப்புதுக் கர்ப்பியங்களைப் பழைய திறனாய்வுச் சட்டங்கள் மூலம் ஆராய்ந்தனர். ஆனால் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் இம்முறை கையாளப்படவில்லை. முதற் காப்பியமாகிய சிலப்பதிகாரத்தை அடியொற்றி மூன்றாங் காப்பியமாகிய சிந்தாமணி தோன்றவில்லை. 9 முதல் 12 ஆம் நூற்றாண்டு வரை இரண்டு பெருங்காப்பி யங்கள் தோன்றின. முதலில் தோன்றியது கம்பனது இராமாயணம். திருத்தொண்டர் புராணம் ஆகிய பெரியபுராணம், இதனை அடுத்து தோன்றியது. ஒரே நூற்றாண்டில் தோன்றவில்லையாயினும் இவற்றுக்குள் எவ்விதத் தொடர்புமில்லை. அறிவுக்கு விருந்தாகக் கம்பன் காப்பியம் அமைத்தான். உணர்வுக்கு விருந்தாகச் சேக்கிழார் காப்பியம் அமைந்தது. எனவே அடிப்படைக் குறிக் கோளிலேயே மாறுபட்டுவிட்டமையின் இவை இரண்டிற்கும் பெர்துத்தன்மையே இல்லாமற் போய்விட்டது. அவ்வாறு இருக்க எதனை அடிப்படையாகக் கொண்டு திறனாய்வு கூற இயலும்: அதிலும் முடியுமுறைத் திறனாய்வு என்பது சற்றும் இயலாத தொன்றன்றோ? செம்மையான முறையில் முடியுமுறைத் திறனாய்வு தமிழ்நாட்டில் தோன்றி வளர்ந்திருக்குமேயாயின் பன்னிரண்டாம் நூற்றாண்டின் பின்னரும் சில நல்ல இலக்கியங் களும், காப்பியங்களும் தோன்றி இருத்தல் கூடும். இம்முறைத் திறனாய்வு சிறந்த இலக்கியங்களைப் போற்றுவதோடு அவை மேலுஞ் சிறக்க வழி வகுத்திருக்கும். இத் திறனாய்வு இன்மையின் இலக்கிய ஆசிரியர்கள் திசை காட்டுங் கருவியற்ற நாவாய் ஒட்டிகள் போல் ஆயினர். சங்கம் என்ற ஒன்று நிலவிய காலத்தில் இலக்கியம் பல்தி வளர்ந்தமை கண்கூடு. அத்தகைய ஒரு திறானாய்வுக் கழகம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/163&oldid=750973" இலிருந்து மீள்விக்கப்பட்டது