பக்கம்:இலக்கியக் கலை.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறனாய்வும்-வ்கைகளும் 147 இன்மையே பிற்காலத்தில் இலக்கியம் மங்கி மடியக்காரணமாயிற்று. எனினும் முடிபுமுறைத் திறனாய்வுவளர்ந்திருக்குமாயின் நன்மையே ஏற்பட்டிருக்கும் என்று உறுதியாகக் கூறல் இயலாது. இம்முறை எவ்வளவு நன்மை பயக்கின்றதோ அவ்வளவு தீமையும் பயந்திருக் கலர்ம். ஏதாவது ஒன்றை நல்லது என்று மனத்துட்கொண்டு அதனோடு ஒத்துவராத அனைத்தையும் மட்டம் என்றுங் கூறிக் கொண்டே இருந்தால் எவ்வாறு புதிய இலக்கியங்கள் தோன்றுதல் கூடும்? இருந்ததாக அறியப்படும் மதுரைச் சங்கம் ஒரளவு நன்மை செய்ததுடன், அப்பழஞ்சங்கம், முடிபுமுறைத் திறனாய்வையே கையாண்டு, மிகுதியும் பழமை பாராட்டும் பண்பினதாகவே இருந்தது போலும். இன்றேல், சங்கப் பாடல்கள் என்று இன்று நம்மால் குறிக்கப்படும் அனைத்தும் இப்படி ஒரே முறையில் கூறிய வற்றையே திருப்பித் திருப்பிக் கூறும் இயல்பினவாக அமைந்திரா. புதிய வழிகளில் செல்லப் புலவர்கள் அஞ்சினர் போலும்! செலுத்துகிலை அடுத்துக் காணவேண்டுவது செலுத்துநிலை அல்லது விதி முறைத் திறனாய்வாகும். விஞ்ஞானத் துறையில், பல பொருள் களையும் ஆராய்ந்து அவற்றுள் பொதுத் தன்மை காண்பதுபோல் இலக்கியத்திலும் காணவேண்டும் என்பதே இத் திறனாய்வு முறையின் அடிப்படையாகும். இம்முறைப்படி, ஒன்றுடன் ஒன்றை ஒப்புநோக்கி, இது சிறந்தது அது சிறந்தது என்று கூறல் தவறாகும். தாவர நூற்புலவன் ஒருவன் பலவகைப் பூக்களையும் கண்டு அவற்றை ஆராய்ந்து அவற்றின் இயல்புகளை அடிப்படையாகக்கொண்டு 'இனம்” பிரிக்கிறான். ஆனால் அவன் ஒரு பூ மற்றொரு பூவைவிடச் சிறந்தது என்று குறிப்ப தில்லையல்லவா? இயல்பால் மாறுபாடு உடைய பூக்களைப் பிரிக்கிறானே தவிர, சிறப்புப் பற்றி அவன் பூக்களைப் பிரிப்பதில்லை. அதேபோல இலக்கியத்திலும் திறனாய்வு செய்யப்படல் வேண்டும். குறிஞ்சித்திணையைப் பற்றிப் L16)}rf பாடியுள்ளனர். அவரவர் மேற்கொண்ட முறை என்ன என்று ஆராயவேண்டுமே தவிரக் கபிலர் புர்டிய குறிஞ்சித்திணைப் பா ட ல் க ள் ஏன் மற்றவற்றைவிடச் சிறப்.,டையன என்று ஆராய்தல் ஆகாது. குறிஞ்சியைப் பற்றியே இருவரும் பாடினதால் அப் பொதுத்தன்மையை அடிப்படையாகக்கொண்டு சி ப் ைவ ஆராயக்கூடாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/164&oldid=750974" இலிருந்து மீள்விக்கப்பட்டது