பக்கம்:இலக்கியக் கலை.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறனாய்வும்-வகைகளும் 149 , பிறவகைகள் - - - சுருங்கக் கூறுமிட்த்துச் செலுத்துநிலைத் திறனாய்வென்பது "உண்மை காணும் நோக்கத்துடன் செய்யப்படும் ஆராய்ச்சியே ஆகும். அதற்குரிய சட்டங்களை அவ்விலக்கியத்திலிருந்து பெறவேண்டுமே தவிர, வெளியுலகச் சட்டங்கள் கொண்டு அவற்றை ஆய்தல் கூடாது. இம் முறைப்படி பார்த்தால் இலக்கியத்தை மதிப்பிடுதல் என்பது கூடாத காரியம். தனிப்பட்ட்வர் சிறப்பியல்புகள் ஆராயப்படவேண்டுவதின்று. இம்முறைத் திறனாய்வு பெரிய தொகுப்பாகிய வரலாற்றுமுறைத் திறனாய்வின் பாற்படும். ஷை முறைத் திறனாய்வில் செலுத்து நிலைத் திறனாய்வை அடக்குவதில் ஒரு சிறப்பு உண்டு. முடிபு முன்றயில் உள்ள தீமைகளை நீக்கிச் செலுத்துநிலையிலுள்ள நன்மைகளையும் உடன்சேர்த்துப் பேசுவதே சரிதமுறைத் திறனாய்வு. எந்த ஒரு நூலும் இலக்கிய உலகில் நிற்கும் இடத்தையும், கலைவளர்ச்சிக்கு அந்நூல் செய்யும் தொண்டையும் எடுத்துக் கூறுவதே இவ்வகைத் திறனாய்வு. அடுத்துளது போராட்டுமுறைத் திறனாய்வு எனப்படும். நூலின் நலங்களையும் சிறப்புக்களையும் மட்டும் கூறி ஏனைய பகுதிகளை வாளா விட்டுவிடுவதே இம்முறையின் நோக்கமாகும். தமிழ் இலக்கியங்கட்கு உரை தந்த பெரியார்கள் அனைவரும் இம்முறையையே பெரிதும் கையாண்டனர். மூன்றாவதாக உள்ளது பகுப்புமுறைத் திறனாய்வு ஆகும். இது பெரிதும், முன்னர்க் கூறிய முடிபு முறைத் திறனாய்வுடன் தொடர்புடையது. நூலின் பகுதிகளையும், அவை ஒன்றுடன் ஒன்று பொருந்தும் வகையையும், ஆய்வதே இம்முறையாகும். இவ்வாறு பல வகைகளாகத் திறனாய்வு முறைகள் மேனாடு களில் பரவி இருப்பவும் தமிழ் இலக்கிய உலகில், இது கால் கொள்ளாதது விந்தையே! சங்ககால நூல்கள் என்று வழங்கப் பெறும் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் தோன்றிய இரண்டாயிரம் ஆண்டுகள் கழித்து இன்று நாம் அவற்றையும், அவற்றைப் படைத்த தமிழ் இனத்தையும் நினைக்குங்கால் வியப்பும் வருத்தமும் ஒருங்கே அடைய வேண்டியுளது. உலகிடை ஏனைய பகுதிகளில் மக்கள் நன்கு வாழ வகை தெரியாக் காலத்தே இத் தமிழன் வாழும் இலக்கியங்கள் படைத்துவிட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/166&oldid=750976" இலிருந்து மீள்விக்கப்பட்டது