பக்கம்:இலக்கியக் கலை.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 . இலக்கியக் கவை அறிய முடியா இயல்பு கவிதையில் மிளிர்வதனாலேயே அறிஞர்கள் இதனிடத்து மேலும் மேலும் அறிவைச் செலுத்து இன்றனர். அங்கனம் செலுத்திக் கண்ட முடிவுகள் பல, அவற்றுள் சிலவற்றை இங்கே காணலாம். . முருகியலும் கலையும் பண்டைய கிரேக்கர்களே 'கவிதைக் கலை என்ற சொல்லைப் புயன்படுத்தினர். கலைகளெல்லாம் உணர்வை வெளியிடும் சாதனங்களே. கவிதையும் உணர்வை நிரல்படக் கோத்த ஒலிகளால் வெளியிடுகின்றதாதலால் கலையாகிறது. இவ்வுணர்வு மனிதனிடம் மறைந்து கிடக்கும் முருகியலைத் தட்டி எழுப்புகிறது. பொருள்களிடம் அழகு காணப்படுகிறது. அவ்வழகை நாம் அனுபவிக்கும் பொழுது 'முருகுணர்ச்சியைப் பெறுகிறோம். ஆனால் அழகை அநுபவிப்பதற்கு முருகியலைப் பற்றி அறிந்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. நிறைந்த அழகை அநுபவிக்கும் பொழுது உண்டாகும் உணர்வு மீண்டும் வெளிவர முயல்கிறது. அங்ஙனம் வெளிவருகையில் அது கலைவடிவம் கொண்டு வருகிறது. வெளியிடுபவன் தன்மைக்கும் சக்திக்கும் ஏற்ற கலையாக அது உருவாகிறது. தாஜ்மஹால் சலவைக்கல் வடிவாகத் தோற்றுவதன் முன்னரே ஒரு சிற்பியின் மனத்தில் அது கருக்கொண்டிருந்திருக்கும் அல்லவா? அந்நிலை யிலும், பின்னர்.அக்கருவுக்கு வடிவு கொடுக்கும் நிலையிலும் அவன் கலைஞன் எனப்படுகிறான். - கலையின் பயன் ருஷிய தேசப் பெரியாரான "டால் ஸ்டாய், கலை என்பது அதனிடத்துப் பழகுகிறவர்களை உணர்வு வலையில் சிக்கச் செய்யவேண்டும்".என்று கூறினார். ம்னிதனிடம் அமைந்து கிடக்கும் பலவகை இயல்புகளுள் "ஆக்கும் இயல்பூக்கமும் ஒன்று. அந்தச் சக்தியோடு பலமான 'உணர்ச்சியும் சேரும்பொழுது ஒரு புதிய செயல் தோன்றித்தான் திரும். அச்செயலின் தோற்றத்திலும் அத் தோற்றத்திற்குரிய முயற்சியிலும் மகிழ்ச்சி உண்டாகிறது. இத்தகைய மகிழ்ச்சியில் முகிழ்த்த கலையில் ஈடுபடுகிறவர் அனைவரும் மகிழ்சசி அடை இன்றனர். ஆனால் கலையைக் கண்டு எல்லோரும் மகிழ்கிறார்கள் என்று சொல்வதற்கில்லை. அக்கலையில் ஈடுபடக்கூட் ஒருவகை ஆேற்றில் தேவை. .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/169&oldid=750979" இலிருந்து மீள்விக்கப்பட்டது