பக்கம்:இலக்கியக் கலை.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியக் கலை இயல் : ! இலக்கியம் : அறிமுகம் இலக்கியம்’ என்னும் சொல், எத்தகைய நூலைச் சுட்டுகிறது என்பதை வரையறுத்துக் கூறுவது ஒரு சிக்கலான செயல். ஆனால், அதனை நடைமுறை வாழ்க்கையில், எளிதில் இனம் கண்டுகொள்ள இயலும். ஒருவருடைய மேசையின் மீது புகைவண்டிகளின் கால அட்டவணை, இந்திய வரலாறு, மாநிலத்தன்னாட்சி ஆய்வு அறிக்கை, பாரதியார் கவிதைகள் என்னும் நூல்கள் இருப்பதாகக் கொள்ளுவோம். உயர்நிலைப் பள்ளி மாணவன் ஒருவனிடம் அந்த மேசையின் மீதுள்ள இலக்கியத்தைக் கொண்டுவா, என்று சொன்னால், அவன் மேசையின் மேலுள்ள புத்தகங்களைப் புரட்டிப்பார்த்து பாரதியார் கவிதைகள்' எனும் நூலையே பொதுவாக எடுத்துக் கொண்டு வந்து தருவான். இதிலிருந்து புலனாவது யாது? ஒரளவிற்குக் கல்வியறிவு உடையவர்கூட இலக்கியம் என்பது யாது?’ என்பதை அனுபவத் தின் வாயிலாக எளிதில் அறிந்துகொள்ள இயலும் என்பது தெரிகிறது. குறிப்பிடப்பட்ட நூல்களுள், பாரதியார் கவிதையை, இலக்கியம் எனவும், மற்றவற்றை வெறும் நூல்கள் எனவும் கருதுவதற்குரிய காரணத்தைப் புரிந்துகொண்டால் ஒரளவிற்கு இலக்கியத்தின் இயல்பினை அறிந்தவராவோம். இலக்கியப் பண்புகள் புகைவண்டிகளின் கால அட்டவணை, இந்தியவரலாறு போன்ற புத்தகங்கள் கருத்தைத் தெரிவிப்பன. ஆனால், அவை படிப்பவரின் மனத்திற்கு மகிழ்வூட்டுவன அல்ல. மேலும், அவை 'செஞ்சொற் கவியின்பம் பயப்பனவும் அல்ல. "இலக்கியம்’ எனும் சொல்லை, மிகவும் பரந்த பொருளில் பயன்படுத்துவோமானால், இ. -1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/17&oldid=750980" இலிருந்து மீள்விக்கப்பட்டது