பக்கம்:இலக்கியக் கலை.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் அதனுள் அமிழ்ந்துவிடுகிறது.அநுபவம் ஒன்றே எஞ்சி நிற்கிறது. இவ்வதுபவநிலை என்பது கற்பனை செய்யமுடியாத தொன்று, இவ்வதுபவத்திலிருந்து அவன் மீளும் பொழுது வேறு மனிதனாகவே இருக்கிறான். இவ்வநுபவமும் அவனது கற்பனை என்ற பொருளோடு கலந்து புதியதொரு வடிவு பெறுகிறது. அவ்வடி வினைப் பூரண வடிவு என்று கூற இயலாது பின்னர் அவனது :சொல்லால் அது பூரண வடிவை அடைகிறது. அவ்வாறு அவன் பாடி முடித்த பின்னரே அவனது விருப்பம் எதுவாக இருந்தது என்பது அவனுக்கே புலப்படும். ... . . - . - கவிதை வடிவாக அது வெளிவந்து முடிகிறவரையில் அவனிடம் கவிதைப் பொருள் இருக்கிறது என்று சொல்வதைக் காட்டிலும், கவிதைப் பொருளில்,அவன் இருக்கிறான் என்றுகூறுவதே பொருத்த முடையதாகும். . . . . . . . . . . . சாத்தனார் என்ற ஒரு புலவன் மூலம் கண்ணகி வரலாற்றைக் கேட்டார் "இளங்கோ கேட்டு முடித்தவுடன் தம்மை மறந்து அப்பத்தினிப் பெண்ணின் வரலாற்றில் ஈடுபட்டார் சிறிது ஈடுபட்ட பிறகு அவருக்குத் தோன்றிய முதலாவது எண்ணம், "நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள்' என்பதேயாகும். பிறகு அவ்வெண்ணம் முற்றுப் பெறப் பின்ன்ெடுங்காலம் ஆகியிருக்கும். ஒவ்ெெவாரு முறையும் அவர் பாடத் தொடங்கிய பொழுது புதிது புதிதாக அவ்வரலாற்றில் ஈடுபட்டுத் தம்மை ஆறந்த நிலையிலேயே பாடி இருத்தல் வேண்டும். அதனாலேயே அது புதியதாக ஆக்கப்பட்ட பொருளாகத் தோன்றுகிறது. இத்தகைய தன்னை மறுத்தல் நிலை எப்பொழுதுவருகிறதென்றோ. போகிறதென்றோ கவிஞனாலேயே அறிய முடியாது. அத்தகைய நிலையையும் அதனால் பெறுங்காட்சியையும் மனித அறிவு கடந்த நிலையாக நினைக்கிறோம். அத்தகைய நிலையில் முகிழ்த்த பாடலில் ஒரு சொல்லைக்கூட நாம் மாற்றி அமைத்தல் இயலாத காரியம். ' 1. Poetics. 2. Emotion.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/173&oldid=750984" இலிருந்து மீள்விக்கப்பட்டது