பக்கம்:இலக்கியக் கலை.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் : 14 கவிதையும் கற்பனையும் விளக்கலாகாக் கற்பனை கற்பனை' என்று கூறியவுடன் பிற்காலத் தமிழ்ப் பாடல்கள் சிலவற்றைப் படித்த நம்மில் சிலர் நம்ப இயலாதவையும், இயற்கைக்கு மாறானவையுமான சிலவற்றைப் பற்றிக் கவிதை புனைவதுதான் என்ற முடிபுக்கு வந்து விடுவோம். அளவுக்கு மிஞ்சிய கற்பனை என்றும் அபூத கற்பனை என்றும் சில சொற்கள் நம்மிடையே அடிபடுகின்றன என்றாலும் கற்பனை என்றால் என்ன என்று அறுதியிட்டுக் கூற இயலாது. ஒன்றுமட்டும் உறுதியாகக் கூறலாம், மேலே கூறியதுபோல நம்மில் பலர் கற்பனை என்று கூறுபவை உண்மையில் கற்பனை அல்ல, கவிதையில் கற்பனை மிகுதியும் பயன்படுகிறதென்ற தன்மை பலரும் அறிந்ததே. ஆனால் கற்பனை என்றால் என்ன? அதன் தன்மை யாது? அதன் அளவு என்ன கவிதையில் எவ்வளவு தூரம் அது பயின்று வரலாம்? என்ற இத்தகைய வினாக்களுக்கு விடை கூறுதல் சிறிது கடினமாகும். கினைவும் கற்பனையும் கற்பனையைப்பற்றி முடிவான கருத்தாக ஒன்றும் இதுவரை வெளியாகவில்லை. கற்பனை என்பது புலன்கள் நேரடியாக ஒரு பொருளை அநுபவியாத காலத்திலும் அந்தப் பொருளை நினைவிற்குக் கொண்டுவரும் ஒருவகைச் சக்தி என்று பலர் கருதுகின்றனர். அங்ஙனமாயின் ஞாபக சக்தி அல்லது நினைவு என்பதற்கும் கற்பனைக்கும் வேறுபாடு இல்லையாக முடியும். நினைவுச் சக்தியிலிருந்து இரு வகைகளில் கற்பனை வேறுபட்டது. முன்னர்க் கண்ட அல்லது அ து ப வி த் த பொருளை அப்படியே மீண்டும் மனத்தில் கொணரும் தொழிலானது கற்பனை, நினைவு என்ற இரண்டிற்கும் உண்டு. ஆனால் மனத்தில் கொணரும் அப்பொருளினிடத்து மறுபடியும் அநுபவத்தை ஏற்றும் தன்மை நினைவிற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/175&oldid=750986" இலிருந்து மீள்விக்கப்பட்டது