பக்கம்:இலக்கியக் கலை.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிைதயும் ‘بیگمற்பனையும் 159 இல்லை. அதைச் செய்ய வல்லது கற்பனை ఇత3p} இது நன்கு விளங்குவதற்கு ஒர் உதாரணத்தைக் காண்போம். நினைவின் வேலை தாவர நூல் வல்லான் ஒருவன் முல்லைப்பூ ஒன்றை நோக்கு வதாக வைத்துக்கொள்வோம். அவனுடைய மனம் முழுவதும் அதனுடைய புறத்தன்மையிலேயே ஈடுபட்டிருக்குமன்றோ? அதனுடைய புறவிதழ், அகவிதழ், காம்பு, மகரந்தம் கோசம் முதலியவற்றிற்கு அப்பால் அவன் செல்வதில்லை. அவனுக்கும் ஒருவகையான நினைவுசக்தி வேலைசெய்யத் தொடங்குகிறது. அந்தப் பூவை, தான் வகுத்துள்ள தாவரக் குடும்பங்களில் எந்தக் குடும்பத்தில் சேர்க்கலாம் என அவன் ஆராய்ந்து முடிவு கட்டுகிறான். இவ்வளவில் அவனது நினைவும் முடிவுறுகிறது. ஏறத்தாழ நினைவு அளவிலேயே அது முடிந்துவிடுகிறதாகலின் இந்நினைவின் பயனாக உணர்ச்சி தோன்றுவதில்லை கற்பனையின் வேலை இனி, நல்ல கற்பனை உடைய ஒருவன் அதே முல்லைப் பூவைக் காண்கிறான். உடனே அவனுடைய கற்பனை தன் தொழிலை ஆரம்பிக்கிறது. முல்லை பூக்கும் காலம் நினைவிற்கு வருகிறது. இவ்வளவில் நினைவின் வேலை முடிந்து கற்பனை தொடங்கினவுடன் உணர்ச்சிக்கு வேலை கிடைக்கிறது. தன்னை ஒரு தலைவியாகவும், தன் தலைவன் பிரிந்து சென்றுள்ளதாகவும், அவன் கார்காலம் தொடங்கியவுடன் வருவேன் என்று சொன்ன தாகவும் கற்பனை செய்துகொள்ளுகிறான். கார்காலம் தொடங்கியும் தலைவன் வாராமையினால் தனக்கு அது வெட்கமாக இருப்பதாகவும் கற்பனை செய்துகொள்கிறான். அக் கார்காலமே தன்னை நகையாடுவதாகவும் எண்ணுகிறான். இந்த அளவில் கற்பனையின் வேலை முற்றுப்பெறுகிறது. இதுவரை உணர்ச்சி வசப்பட்டுக் கற்பனையில் திளைத்த அவன் தன்பாலுள்ள ஆக்கல் சக்தியால்: - இக் கற்பனையைக் கவிதை ஆக்குகிறான், கவிதையை நோக்குக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/176&oldid=750987" இலிருந்து மீள்விக்கப்பட்டது