பக்கம்:இலக்கியக் கலை.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையும் கற்பனையும் 161 கற்பனையின் பயன் கவிஞன் சொற்களைக் கோவை செய்தே கவிதை இயற்றுகிறான். ஆனால் கவிதையைப் படித்தபிறகு நமக்கு உணர்ச்சியும் கற்பனையும் தோன்றுவதுபோலக் கவிஞனுக்குத் தோன்றுவதில்லை. முதலில் ஏதோ ஒரு பொருளைக் கண்டதும் கவிஞன் மனம் வேலைசெய்ய ஆரம்பிக்கிறது. சிறிது சிறிதாகக் கற்பனை உலகினுள் நுழைகிறான். அவன் தன்னை மறந்து கற்பனையுலகில் சஞ்சரிக்கும் பொழுது ஒரு தனிப்பட்ட நிலையை அடைகிறான். மிகவும் எளிமையான ஒருபொருள்கூடக் கவிஞனைச் சில சமயங்களில், இந்நிலைக்குக் கொண்டுவந்துவிடும். மகாகவி காட்டே, ரூஸ் என்ற ஒவிய நிபுணர் தீட்டிய செம்மறி ஆடுகளைச் சிறிதுநேரம் பார்த்துக் கொண்டே இருந்துவிட்டுப் பின்வருமாறு கூறினார். 'இவ் விலங்குகளைக் காணும் போதெல்லர்ம் என் மனத்தில் ஒருவகைத் துணுக்கம் ஏற்படுகிறது. அவற்றின் பொது நிலையும், எல்லைக்கு உட்பட்ட அறிவும் மந்தமான நோக்கும் என் மனத்தை உருக்கி அவற்றினிடம் கருணை கொள்ளுமாறு செய்கின்றன. பல சமயம் நானே ஓர் ஆடாகி விடுவேனோ என்ற அச்சமும் என் மனத்தில் தோன்றுகிறது. இவ்வோவியத்தைத் தீட்டிய ரூஸ் முதலில் தாம் ஓர் ஆடாக மாறிய பின்னரே இவ்வளவு உண்மையுடன் இதனைத் தீட்டி இருத்தல்கூடும்.' கீட்ஸ் என்ற ம்ற்றொரு மேதை கூறுகிறார்: "கவலையின்றிப் பறந்து திரியும் சிட்டுக்குருவி எனது பலகணியின் வழிய்ே வரின், urif; ೯rr T மறந்து சிட்டாகவே மாறிவிடுகிறேன். மேலும் சிறு பரற் க்ற்களையும் கொத்தத் தொடங்கிவிடுகிறேன்." இந்த இரண்டும் கவிஞன் கற்பனையுலகில் புகுந்தவுடன் எவ்வாறு கற்பனை அவனை ஆட்கொள்ளுகிறது என்பதற்கு உதாரணமாக இலங்குகின்றன. இவ்வாறு பொருள்களிடத்தில் மனத்தைச் செலுத்தி தம்மை மறந்திருக்கும் நிலைமை பலருக்கும் உண்டு. பாரதியார். நீலநெருக்கிடையில் நெஞ்சு செலுத்தி நேரம் - கழிவதிலும் நினைப்பின்றியே சாலப் பலப்பலநற் பகற்கனவில் தன்னை மறந்தலயம் தன்னிலிருந்தேன் என்றுபாடியதும் கற்பனை யால் கவிஞன் ஆட்கொள்ளப் பெற்றதற்கு உதாரணம். தமக்கு விருப்பமான பூவைக் கண்டவுடன் மனத்திலேயே அப்பூவைப்பறித்து நீண்ட தூரத்திலிருக்கும் காதலிக்குச் சூட்டி மகிழ்பவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/178&oldid=750989" இலிருந்து மீள்விக்கப்பட்டது