பக்கம்:இலக்கியக் கலை.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

a # ã - - - ن ټن . . هْ .j : ... ب : م ió3 - இலக்கியக் கண்ல் எத்துணை பேர். அப்படியே குட்டி மகிழ்வதுடன் நில்லாமல் அவர்களுடன் சிற்றுலாப் போகிறவர் எத்துணை பேர்; எல்லாம் கற்பனையில்தான். குழந்தைகள் சொப்புக்களை வைத்துக்கொண்டு சமையல் செய்து விளையாடுகின்றன. வெறும் பாத்திரத்தில் சோறு இருப்பதாக நினைந்து உண்டு மகிழ்கின்றன. தாம்மட்டும் அல்லாமல் நம்மையும் உண்ணுமாறு வேண்டுகின்றன. உண்ண மறுத்தால் வருந்துகின்றன. ஒரே சொப்பை வைத்துக்கொண்டு அதிலேயே சோறு, கறி பாயாசம் உள்படச் செய்து முடித்து மகிழ்கின்றன. அனைத்திற்கும் பயன்படுவது கற்பனை ஒன்றே. இல்லாத காதலிக்குக் கிடைக்காத மலரையும், ஆபரணத்தையும் குட்டி மகிழும் காதலனும் இங்குக் கூறப்பெற்ற குழந்தையும் ஒரே நிலையில்தான் உள்ளனர். கவிஞன் இத்தகைய கற்பனையிலிருந்து விடுபட்டவுடன் தனது கற்பனைக்குக் கவிதை என்ற வடிவு கொடுக் கிறான். - ... - . கற்பனை மணம் இந்நிலையில் இவனிடத்துக் கற்பனை என்பது போய்க் கற்பனை இவனை ஆட்கொள்ளுகிறது. உடனே பாடல் முகிழ்ச் கிறது. எனவே அப்பாடலும் அதிலுள்ள சொற்களும், கற்பனையில் தோய்ந்து, அதன் மனம் வீசும் நிலையில் இருக்கின் நன. பூவிருந்த கூடையை மோந்தாலும் மணம் வீசுவதுபோலப் பாடல் கற்பனை மனம் வீசுகிறது. பூவிருந்த கூடை நீங்கிய சிறிது காலத்தில் மணத்தை இழக்கிறது. ஆனால் பாடலும் அதிலுள்ள் சொற்களும் என்றும் கற்பனை மணத்தை இழப்பதில்லை. - கற்பனையின் தோற்றத்திற்கு மூலகாரனமாக நினைவுச் சக்தி இருப்பினும் മ്ലങ്ങഖ இரண்டும் வெவ்வேறானவை என்பது தெளிவு. முல்லையைக் கண்ட செய்ல் ನಿಣ೯Tಣ್ಣಿನ பாற்படும். அம்முல்லையைக் கள்மாகக்கொண்டு முகிழ்த்த கவிதை நினைவுச் சக்தியால் தோன்றியதன்று. ஏனென்றால் முன்னர், அநுபவியாத ஒன்றை நினைவிற்குக் கொணர முடியாது. முல்லை சிரித்தலாகிய ஒன்றை என்றும் நாம் அநுபவித்ததில்லை. ஆகவே, அதனைப் புலவன் நினைவுச் சக்தியால் கூறினான் என்து பொருந்தா தன்றோ? இது கற்பன்ை ஒன்றினாலேயே அநுபவிக்கக்கூடியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/179&oldid=750990" இலிருந்து மீள்விக்கப்பட்டது