பக்கம்:இலக்கியக் கலை.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையும் கற்பனையும் 168 ஆக்கக் கற்பனை கற்பனையைப் பற்றிப் பேசும்போது சில ஐயங்கள் மனத்தில் தோன்றுகின்றன. சில பாடல்களைப் படித்து விட்டுக் கவிஞன் பொய்யான கற்பனையையும், வாழ்க்கைக்குப் பயன்படா த ஒன்றை யும். பாடினான் என்று சிலர் கூறக் கேட்கிறோம். இக் கூற்று உண்மையா என ஆராய்வோம். கற்பனை மனத்தில் சில எண்ணங்களையும் கருத்துக்களையும் தோற்றுவிப்ப தோடு நின்றுவிடுவதில்லை. கவிதைக் கலையில் சிறந்தவராகிய வோர்ட்ஸ்வர்த் என்ற மேலைநாட்டுக் கவிஞர். கற்பனையை இரு கூறாக்கி, இரு பெயர் தந்துள்ளார். ஒன்றை ஆக்கக்கற்பனை என்றும், மற்றையதை "கினைவுக் கற்பனை என்றும் கூறுகிறார்." இவற்றுள் முன்னையது மிக ஆழமானதும் விரிந்ததும் ஆகும். பொருளைக் கண்டவுடன் அதன் புறத்தோற்றம் முதலியவற்றில் ஈடுபடாமல், அதன் அகத்தை ஊடுருவி நோக்கியும் உட்கருத்தை அறிந்தும் அவற்றின் பயனாகத் தோன்றுவது இந்தக் கற்பனை. இம்மட்டோடு நில்லாமல் இக் கற்பனை ஆக்கல் தொழிலில் ஈடுபடு கிறது. அப்பொருளின் உண்மைத் தன்மை, இவ்வுலகில் அது நிலவு தற்குரியகாரணம், ஏனைய பொருள்களோடு இதற்குள்ள தொடர்பு முதலியவற்றை வரிசைப்படுத்திக் கவிஞன் கூறுகையிற்றான் அவனது ஆக்கச் சக்தி வெளிப்படுகிறது. ஏனையோர் கண்டும் காணாத உண்மையை, ஒருவாறு எடுத்துக் காட்டியவிடத்தும் நம்ப் இயலாதது என்று தள்ளப்படும் உண்மையை அவன் எடுத்துக் கூறுகிறான். புல், பூண்டில் தொடங்கி, மனிதனில் முடிவுபெறும் இந்தப் பரந்த உலகின் பல்வேறு பொருள்களுக்கும் இடையே காணப்படும் நூல்போன்ற தொடர்பைத் தன் ஊடுருவி நோக்கும் கற்பனையால் கண்டு, கண்ட முடிபுகளைத் தனது அநுபவம் என்ற உலையில் பெய்து சமைத்து இறுதியில் ஒரு முழு வடிவம் பெற்ற கலைப்பொருளாகவோ கவிதையாகவோ அவன் வெளியிடுகிறான். வடிவுபெற்ற அக்கலை அவனது அகக்கண்ணில் பளிச்சென்று. மிேன்னிட்டுத்தோன்றும் ஒரு முடியே தவிர, ஆராய்ச்சி அல்லது காரணகாரியத் தெர்டர்பால் ஏற்பட்ட முடியன்று. இவற்றை யெல்லாம் கடந்து நின்ற நிலையில், கற்பனை ஒன்றுக்கே தோன்றும் அதனைக் கார்ன் காரியத்தால் ஆராய முற்படுவது தவறானது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/180&oldid=750992" இலிருந்து மீள்விக்கப்பட்டது