பக்கம்:இலக்கியக் கலை.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 இலக்கியக் கலை இப்பொருளுக்கு வடிவு கொடுக்கும் சக்தி கலைஞனது அக் மனத்திலிருந்தே தோன்றுகிறது. சாத்தனார் என்ற நண்பன் மூலம் பத்தினித் தேவியாம் கண்ணகியின் வரலாற்றைக் கேட்டுக் கொண்டே வந்தார் இளங்கோவடிகள். அச்சரிதை உயிருள்ள பல கற்பனைகளை அவர் மனத்தில் தூண்டிற்று. கண்ணகியினிடத்துப் பக்தி, வியப்பு என்ற உணர்ச்சிகள் தோன்றலாயின. உடனே, ஒரு முழுவடிவு பெற்ற கவிதையைப் புனைந்தார். ஒருவகை உணர்ச்சியே இந்தக் கவிதையின் தோற்றத்தின் காரணமாகவும் இருக்கக் காண்கிறோம். கலைஞனுடைய உணர்ச்சியின் ஆழம் முதலானவற்றிற்கேற்ப அவனுக்கு அநுபவம் ஏற்படும். அவ் வநுபவத்தைப் பிறர்க்குத் தருவதற்காகவே அவன் கலையை உண்டாக்குகிறான். எவ்வாறு அக்கலையை ஆக்கினால் தன் னுடைய அநுபவம் பிறருக்குப் பயன்படும் என்று அவன் கண் டானோ அதற்கேற்பவே கலையை ஆக்குகிறான். அவனால் வடிவு கொடுக்கப்படும் அக்கலைக்குச் சட்டதிட்டங்களும் அவனே வகுக்க வேண்டும், பிறர் இயற்றும் சட்டங்களுக்கு அவை ஒருநாளும் கட்டுப்படமாட்டா. அவனுடைய கலையை நாம் அநுபவிக்க வேண்டுமாயின் அவனுடைய சட்டதிட்டங்கட்குக் கட்டுப்பட்டே அதுபவிக்கவேண்டும். நம்மை வந்து அனுபவிக்குமாறு அவன் வருந்தி அழைக்கவில்லை. நாமாக விரும்பி அதனிடம் சென்று விட்டு நம்முடைய விருப்பம்போல் அதனை அநுபவிக்க வேண்டு மென்றால் அது நடவாத காரியம், மாதுளம்பழத்தில் தோலை எறிந்துவிட்டு விதையைத் தின்கிறோம் என்பதற்காக ம்ாம்பழத் தையும் எடுத்து விதையைத் தின்னத் தொடங்கினால் என்ன ஆகும்? சமீபத்தில் "ஒரு கவிஞரைப் பலர் சேர்ந்து இன்ன பொருள் பற்றித் தாங்கள் பாடவேண்டும் என்று கேட்டுக் கொண்ட பொழுது, அவர் நகைத்துவிட்டு அக் கட்டுப்பாட்டுடன் பாடத்தொடங்கினால் ஒரு கவிகூட வெளிவராது என்று விடை தந்தார். கற்பனையும வாழககையும, . இத்தகைய மனப்பான்மையில் இருந்து கலைஞன் ஆக்கும் கற்பனை உலகம் நாம் இருந்து காணும். இவ்வுலகத்தோடு எவ்வளவு தொடர்பும் மாறுபாடும் கொண்டிருக்க வேண்டும் என்று நாம் அறுதியிட்டுக் கூற இயலாது. நாம் கர்னும் இவ்வுவகம், விஞ்ஞானம் சரிதம் என்ற இவ்விரண்டாலும் அளந்து காண்டற்குரியது. ஆனால் கலைஞனது உலகம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/183&oldid=750995" இலிருந்து மீள்விக்கப்பட்டது