பக்கம்:இலக்கியக் கலை.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 - இலக்கியக் கலை நதியின் பிழையன்று நறும்புன லின்மையற்றே பதியின் பிழையன்று பயந்து நமைப்புரந்தாள். மதியின் பிழையன்று மகன்பிழை யன்றுமைந்த - விதியின் பிழை யிதற்கென்னை வெகுண்டதென்றான். (நகர்நீங். 183) 1.தண்ணீர் இல்லையென்று ஆற்றை யாரேனும் கோபிப்ார் களா? அதுபோல விதியால் நடைபெற்ற ஒன்றுக்கு, ஏன் பரதன் மேலும், கைகேயி மேலும் கோபம்?) சக்கரவர்த்தியாகிய சச்சந்தன் மனைவி விசயை விதிவசத்தால் இடுகாட்டில் குழந்தையைப் பெறுகிறாள். அவளது ஆற்றாத் துயரத்தை ஆசிரியர் வெளியிடுகிறார், . . . . . . . . . வெவ்வாய் ஒரி முழுவாக விளிந்தார் ஈமம் விளக்காக ஒவ்வாச் சுடுகாட் டுயரரங்கின் நிழல்போல் நுடங்கிப் பேயாடி எவ்வாய் மருங்கும் இருந்திரங்கிக் கூகை குழறிப் பாராட்ட இவ்வா றாகிப் பிறப்பதுவோ இதுவோ மன்னர்க் கியல்வேந்தே. சிந்தாமணி.809) |அரண்மனையில் பிறந்திருப்பின் முழங்கும் வாத்தியங் களுக்குப் பதிலாக நரியின் முழவும், இறந்தார் சிதையின் விளக்கும், பேயாடும் அரங்கும் உள்ள இடத்திலா சக்ரவர்த்தி மக்ன் தோன்றுதல் இயல்பு?) . - நினைவுக் கற்பனையின் பயன் மேலே காட்டப்பெற்ற பாடல்கள் பலரால் இலற்றப் பெற்றவை. நினைவுக் கற்பனையின் முடியாய் விளங்கும் இவ்வரிகளில் கவிஞன் நுண்ணிய கருத்துக்களைக் கொள்ளும் பொருட்டு எத்தகைய அரிய சொற்களை ஆட்சி செய்துள்ளான் என்பது படிப்பவருக்கு எளிதில்,விளங்கும். சொற்கள் மட்டிலும் அவ்வுணர்ச்சியைத் தரவில்லை காதில் ஒசை கேட்குடிாறு படித்தால் எவ்வளவு ஓசை நயம் அவற்றின்கண் உள்ளது என்பதும் விளங்கும். வெறும் ஒசை நயமும் சொல்லடுக்குமே அழகிற்குக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/187&oldid=750999" இலிருந்து மீள்விக்கப்பட்டது