பக்கம்:இலக்கியக் கலை.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையும் கற்பனையும் 171 காரணம் என்று நினைப்போமாயின் அதுவும் தவறு. இவ்வரிகளில் கர்ணப்படுப் பொருள்கள் நாம் வாழ்க்கையில் என்றும் கண்டு அநுபவிக்கும். எளிய பொருள்களேயானாலும் - அவை மிகப் பெரியவை. இத்தகைய பொருள்களைப்பற்றிப் பாடுகையில் தான் நினைவுக் கற்பனை செவ்விய முறையில் வேலை செய்கிறது. மேலாக நோக்குபவருக்கு விளங்காமற் போனாலும் மிகுதியும் பாடலில் பயிலுகிறவர்களுக்ரு ஒர் உண்மை தோன்றாமல் போகாது. அது என்னவெனில், இப்பாடல்கள் அறிவுக்கு விருந் தாவதைவிட உணச்சிக்கே - உரியவை என்பதாம். மேலும் இவற்றின் அடிப்படை. உலகம் மக்கள், பிறப்பு, இறப்பு, துன்பம் இவற்றின் இடையே உள்ள தொடர்பின்மேல் எழுவதே என்பதும் விளங்கும். இத்தகைய பாடல்கள் எல்லையற்றதும், பரந்து நிற்பதும். ஆழங்காண இயலாததுமான ஒரு பொருளினிடத்து நம்மை ஈர்த்துச் செல்கின்றன. அவ்வநுபவ முடிவில் நோக்குவதால் வெளியா கின்றன, நாமே நமது சிறுமைக்கு அஞ்சி வெள்குகிறோம். வாழ்க்கையில் புலப்படாத புதிர்களாகிய இறப்பு, துன்பம் என்ற இப்பெருஞ் சக்திகளின் முன்னர் நமது சிறுமை வெளிப்படுகிறது. அதனால் மனச்சோர்வு ஏற்படுவதும் உண்டு. ஆனால் இப்பெருஞ் செயல்களெல்லாம் வாழ்க்கைக்கு இன்றியமையாதன என்றும், இயற்கையின் பல கூறுபாடுகள் என்றும் நினைத்து மகிழ்வதும் ஒரு வகை. அவ்வெண்ணம் தோன்றியவுடன் நாமும் இயற்கையின் ஒரு பகுதியே என நினைந்து மகிழ்கிறோம். எனவே, இவ்விருவகை உணர்ச்சியையும் நம்மிடத்தில் உண்டாக்குவன இப்பாடல்களே. கவிதையை நன்கு அநுபவிக்க விரும்புபவர்கள் கற்பனையைப் பற்றி நன்கு அறியவேண்டியது இன்றியமையாததாகலின் பி அலெக்சாந்தர் என்ற மனவியற் பேராசிரியர் கற்பனைப்பற்றிக் கூறியதை இங்கே எடுத்துக் காட்ட வேண்டியிருக்கிறது. 'மனம் அல்லது ஆன்மாவின் சக்தியே கற்பனை என்று கூறப் படுவது. அது புலனுணர்வன்று; ஏனெனில் அது. பொறிகளிலும் மேம்பட்டது ஞாபக மன்று ஞாபகம் முன்னர் அநுபவித்த ஒன்றை மீட்டும் நினைவில் கொண்டு வருவ்தே தீவிரப் புதியதொன்றை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/188&oldid=751000" இலிருந்து மீள்விக்கப்பட்டது