பக்கம்:இலக்கியக் கலை.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 இலக்கியக் கலை சொல்லின் சூழ்நிலை இச்சொற்களின் மதிப்பு முழுப்பயன் அளிக்க வேண்டுமே யானால், அவை தோன்றும் சந்தர்ப்பத்திலிருந்து அவற்றைப் பிரித்துக் காண முடியாது. மிகச் சாதாரணமான சொல்லும் தான் தோன்றும் இடம் காரணமாக, ஒர் அரிய கற்பனைக்குப் பிறப்பிடமாக விளங்குவது உண்டு. இத்தகைய சந்தர்ப்பங்களில் இச் சொற்கள் ஒரு நிகழ்ச்சியை விவரிப்பது மட்டுமல்ல; நம்முடைய மனத்தில் மீட்டும் அந்நிகழ்ச்சி நடைபெறுமாறும் செய்து விடுகின்றன. - . . . . . . . . . . . . . கடைக்கண்ணால் என்னைக் கொல்வான்போல் நோக்கி நகைக் கூட்டஞ் செய்தான் அக் கள்வன் மகன்,' (குறிஞ்சிக்கவி 16) *தருமத்தின் வதனமென்னப் பொலிந்தது . - • *, தனிவெண். டிங்கள். (கம்பன்-தைலமாட்டு:150) (காணும் நிலவின் புறப்பாடு காணாத தருமத்தைக் கற்பனையில் நிறத்துடன் தோன்றுமாறு செய்கிறது.1 - ...எற்றினன் எற்றலோடும் திசைதிற்ந்து அண்டங் கீறிச் சிரித்தது செங்கட் சீயம்.' (கம்பன்-இரணியன் வதை - 127) [இரணியன் தூணை எற்றினான்; வானுற உயர்ந்த நரசிம்மம் சிரித்ததைக் கவிதையின் சொற்கள், மனக்கண் முன் கொணருகின்றன.1 ; : : '. படைப்புப்பல படைத்துப் பலரேர் டுண்ணும் உடைப்பெருஞ் செல்வராயினும் இடைப்படக் குறுகுறு நடந்து சிறுகை'நீட்டி இட்டுத் தொட்டுங் கவ்வியுங் துழந்தும் :நெய்யுடை அடிசில் மெய்படி விதிர்த்தும் மயக்குறு மக்களை இல்லோர்க்குப் , பயக்குறையில்லைத்தாம் வாழும் நாளே (புறம்-168) - ப்லவாய் செல்வங்களைப் படைத்துப் பலரொடும்: சேர்ந்துண்ணும் மிக்க செல்வ்ர்களாயினும், உண்ணும் பொழுது இடையே குறுகுறுத்த நடையுடின் வந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/200&oldid=751014" இலிருந்து மீள்விக்கப்பட்டது