பக்கம்:இலக்கியக் கலை.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 இலக்கியக் கலை கவிதைக்குரிய சொல் கவிதைக்குச் சொற்கள் எவ்வளவு இன்றியமையாதவை என்று கண்ட பின்னர், எத்தகைய சொற்கள் கவிதையில் பயின்று வரவேண்டும் என்ற வினாத் தோன்றியே தீரும். நம் நாட்டின் இன்றைய நிலையில் பழ்ைமையான சொற்களே பாடலில் தலை காட்டலாகாது என்போர் ஒரு புறமும், புதிய சொற்களே கலத்தலாகாது என்போர் ஒருபுறமும் நின்று போரிடுகின்றனர். எக்காரண்த்தாலோப்ண்டிதத் தமிழ் பாமரத் தமிழ் என்னும் சொற்களும் தோன்றலாயின. ஆனால் கவிதையைப் பார்த்தால் அது இவ்விருவர். கொள்கையையும் ஒப்புக்கொள்வதாயில்லை. சொல்லில் பழமை, புதுமை என்ற வேறுபாடே இருத்தற்கில்லை. சில சொற்கள் ஒரு சிலருக்கே தெரிந்தவையாக இருக்கலாம். அத்தகைய சொற்களைக் கொண்டு கவிதை இயற்றலாகாது உணர்ச்சியூட்டுவதற்காகவே ஏற்பட்டதாகலின் கவிதையில் 'பலருமறிந்த சொல்லே பயிலுதல் வேண்டும். ஒவ்வொரு மனிதனும் தானாக ஆக்கிய் சொல்லையே பயன்படுத்த வேண்டுமெனில் அவனியற்றிய் கவிதை அவனுக்கு மட்டுமே பயன்படுவதாய் முடியும். எனவே இதில் . ஒரு முடிவுக்கு வருமுன்னர்ச் சொற்களைப் பற்றிய ഒഖ ച് ങ്ങഥഞ്ഞങ്ങ அறிய வேண்டும். ... . . . . ."... ..., , மொழிவளர்ச்சியால் பயன் . . . . . . . . . . . . . . . . ஆதிமனிதர்கள் பேசிக்கொண்டிருந்த மொழிக்கும், இன்று நாம் பேசுகிற மொழிக்கும் வேற்றுமை நிரம்ப உண்டு தனக்குத் தோன்றிய உணர்ச்சியை அப்படியே வெளியிட முயன்ற ஆதிமனிதன் தனித்தன் ம்ொழிகளாகவே பேசி விந்தான். ஆனால் இன்று நாம் தொடர்மொழிகளாக அதாவது வாக்கியங்களாகப் பேசுகிறோம். ஆனால் ஆதிமனிதர்கள் பெற்ற அதே உணர்ச்சியைத்தான் இன்றும் நாம் பெறுகிறோம். பசி, தாகம், பயம், மகிழ்ச்சி, வருத்தம் போன்றவைக்ள் என்றும் உள்ளன. ஆனால் இவற்றை வெளியிடும் வகையில்தான் இருகால மக்களும் மாறுபடுகின்றனர். அங்ங்ணம் நாம் மாறுபட்டதால் ஒரளவு நட்டத்தையும், ஒரளவு வேறு வழியில் இலாபத்ை தயும்: அடைந்துள்ளோம். பழங்கால் மனிதன் ஒர் - سنن ته ای : ". ,&_貂 ஒரு மொழியில் கூறி இருப்பிர்னேயாகில், அதே உணர்ச்சியை உணர்த்த நாம் இன்று ஒரு வாக்கியத்தையே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/202&oldid=751016" இலிருந்து மீள்விக்கப்பட்டது