பக்கம்:இலக்கியக் கலை.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 இலக்கியக் கலை போலவே நினைக்கவும் உணர்வு பெறவும் பழகிக்கொள்ளும். எனவே இளமை தொட்டு, ஒருவன் எந்த மொழியைப் பேசிப் பயின்று நினைத்து வருகிறானோ அந்த மொழிச் சொற்களே அவனுடைய எண்ணத்தைத் தூண்டும் சக்திபெற்று விளங்கும் என்று கூறத் தேவை இல்லை. இத்தகைய சக்தியுள்ள சொற்களே கவிதையில் பயன்படுகின்றன. அதனை நாம் படித்து உணரவேண்டு மேயானால் அது தாய்மொழிக் கவிதையாகவே இருத்தல்வேண்டும். ஏனென்றால் தாய் மொழிச் சொல் ஒன்றே பன்னெடுங்காலம் பயிலப்படுவதனால் பெற்ற இச்சக்தியை நமக்கு வெளியிடுதல் முடியும். அச்சொல் காதில் விழுந்தவுடனேயே சில கற்பன்னகள் நம் மனத்தில் எழுகின்றன. நமது அநுபவம் விரிய விரிய இப் பொருளும் கற்பனையும் விரிந்து செல்லும். இது கருதியே வள்ளுவர் ' 'அறிதோ றறியாமை கண்டற்றால்' என்று கூறிப் போந்தார். எவ்வளவுதான் ஒருவர் வேற்று மொழியில் அறிவு பெற்றிருப்பினும் அச் சொற்கள் அகராதிப் பொருளை அவருக்கு உணர்த்துமே தவிர இப்புதுப் பொருளை உணர்த்தா. . . . .” இறந்த சொற்கள் இதுவரைக் கூறியவற்றை நன்கு கவனித்தால் கவிதைக்ளுக்காத வென்றே சில சொற்கள் உண்டா என்ற ஐயம் நீங்கிவிடும். மேலே கூறிய தன்மைகளோடு கூடிய சொற்கள் என்றும் மக்கள் வாழ்க் கையில் பயன்படும் சொற்களாக இருக்குமே தவிர, வழக்கொழிந்த சொற்களாக இருக்க இயலா. உதாரணமாக மாண்ட என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம். இன்று தமிழல் வழக்கொழிந்த சொற்களில் இதுவும் ஒன்று. ஆனால் சங்க இலக்கியங்களில் இது எங்கும். காணப்படும். மாட்சிமைப்பட்ட' என்ற அழகர்ன பொருளையுடைய இச்சொல் இன்று எண்ணத்தைத் தூண்டும் சக்தியை முற்றும் இழந்து விட்டது. சங்கப் பாடல்களில் நிரம்ப இடம் பெற்ற காரணத்தால் இன்று இதனைக் கவிதையில் புகுத்தினால் அது தவறாகவே முடியும். கவிதைச் சொற்கள். ." -- r- . :: . * • . دیا ؟ ؟ ؟ ؟.4 صلى الله عليه وسلم ہی ' : : 5 فيه است * மக்கள் பேச்சு வழக்கில் உள்ள சொற்கள்ே கவிதையில் '_ శ. __\, - . . 3. * * * . . . . . . . . . . .” -: , , , , , , பயன்படவேண்டும் என்று கூறியவுடன், நாம் பேசும் ,** -- w ،»..هي &# + கொச்க்சி மொழிகிள்ெல்லாம் க்விதைக்கு ஏற்றனப்ோலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/207&oldid=751021" இலிருந்து மீள்விக்கப்பட்டது