பக்கம்:இலக்கியக் கலை.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் : 15 சொல் ஆட்சிச் சிறப்பு உள்ளுறையும் இறைச்சியும் கவிதையில் காணப்படும் பொருள் பலதிறப்பட்டதென்றும் நம் முயற்சிக்கும் அநுபவத்திற்கும் ஏற்ற முறையில் அது வெளிப் படும் என்றும் கண்டோம். இங்ங்ணம் பொருளைப் பொதிந்து வைத்திருந்து, வேண்டும் பொழுது வேண்டியவர்க்கு வழங்கும் இயல்பு கவிதைக்கு அமைந்திருக்கிறது. தனித்தனியே சொற் களுக்குப் பொருள் உண்டு என்பதும், இரண்டும் இரண்டுக்கு மேற்பட்டும் சொற்கள் ஒன்று கூடும்பொழுது புதிய புதிய பொருட் செறிவை அவை பெறுகின்றன என்பதும் நாம் அறிந்தவையே. இக் கருத்தைப் பழந்தமிழ்க் கவிஞர்கள் நன்கு உணர்ந்திருந்தார் கள். அதற்கு இலக்கணம் வகுத்துச் செம்மையான முறையில் கவிதைகளில் பயன்படுத்தியும் வந்தார்கள். அவற்றுள் சிறந்த இரண்டு உள்ளுறை, இறைச்சி என்பனவாம். முதலாவதாகிய உள்ளுறை உவமத்தைப் பயன்படுத்துவதால் திணைக்குரிய ஒழுக்கம் கூறப்படும் இடம்.மிகுதியும் சுவை பயப்பதாகும் என்று கூறுகிறார் ஆசிரியர் தொல்காப்பியனார். 'இறைச்சிதானே பொருட் புறத் ததுவே என்று கூறி அதன் இலக்கணம் விரித்தார். ஆனால் அதனைக் கவிஞன் பயன்படுத்தினும் உணர்வார் சிலரே என்ற குறிப்புத் தோன்ற இறைச்சியில் பிறக்கும் பொருளு மாருளவே திறத்தியல் மருங்கின் தெரியு மோர்க்கே என்றும் கூறினார். அதாவது அதன் ஆழம் தெரிந்து பொருள் காணக் கூடியவர்க்கு இறைச்சியின் மூலம் பிறக்கும் பொருளும் உண்டு என்பதாம். - இயற்கைவழி வாழ்ந்த தமிழன் இயற்கையில் நடக்கும் ஒவ்வொரு செயலையும் நன்கு கூர்ந்து கவனிக்கும் இயல்புடைய வனாக இருந்தான். கவிஞனாக உள்ளவன் கவிதை புனையும் பொழுது இவற்றைக் கவிதையில் கலந்தான். நாம் என்றும் காணும் ஒரு காட்சியைக் கவிஞனும் கூறுகிறான். ஆனால் அவன் கூறிய பின்னரே நாம் முன்னர்க் கண்டது நினைவிற்கு வருகிறது. சில சந்திர்ப்பங்களில் சில செயல்களை நேர்டியாகக் கூறுதல் இயலாத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/210&oldid=751025" இலிருந்து மீள்விக்கப்பட்டது