பக்கம்:இலக்கியக் கலை.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல் ஆட்சிச் சிறப்பு 197. தொன்றாயினும் எனது தவச்சிறப்பால் அதனையும் நீங்கி இவண் வந்தாள்' என்ற அழகு தோன்றக் கவிதை புனையப்பட்டுள்ளது: இதே கருத்தை வேறு ஒரு புலவரும் கூறுகிறார். தாம் கூற வந்த பெண்ணை மலரிடத்த வாழும் திருமகளுக்கு உவமிக்கிறார். ஆனால் இரண்டிற்கும் உள்ள வேற்றுமையைக் காணவேண்டும், கூறும் கவிஞர் தொண்டர்சீர் பரவவல்ல சேக்கிழார். கூறும் இடம் காரைக்கால் அம்மையார் சரிதம். காரைக்கால் அம்மையார் கணவன் உணவு உண்கிறான். தான் கடையிலிருந்து அனுப்பிய இரு மாங்கனிகளில் ஒன்றை, உண்டு. அதன் சுவையில் ஈடுபட்ட அவன் அவ்வளவு சுவையுடைய கனியில் மற்றொன்றை மனைவியார் உண்டு மகிழட்டும் என்று எண்ணாதவனாய், அதனையும் இடுக எனக் கூறினான். இல் வாழ்க்கை என்பதை அறியாது, உணவுச்சுவையில் வல்லவனாய் நாவுக்கடிமையாயிருந்தான் அவன் என்று அறிகிறோம் இச் செயலால். அவனை ஆசிரியர், இனியசுவை ஆராமைத் தார் வணிக்ன் என்று குறிப்பிட்டார். இத் தார்வணிகன்’ என்ற ஒரு சொல்லால் எவ்வளவு பொருளை விளக்கிவிட்டார்! இவன் இன்பம் அனுபவிப்பது ஒன்றில் மட்டும் வல்லவன் என்பதும், அவ்வின்பத்தைப் பெற அவன் எவ்வழியையும் கைக்கொள்வான் என்பதும், பெரும்பாலும் வணிகர் வாணிகத்தையே அல்லும் பகலும் நினைப்பார்கள். ஆதலின் அவர்களுக்கு இன்பம் நுகர நேரமும் மனமும் இரா என்பதும் ஆனாலும் இவ்வணிகன் அதற்கு விலக்கானவன் என்பதும், மணமாகிப் பன்னெடுங்காலமாயினும் மாலையின் இன்பத்தின் பொருட்டு அதனை அணிந்திருந்தான். என்பதனால் விளக்கிவிட்டார். எனவே இத்தகையவன் மனைவிக்கு வேண்டுமே என்ற எண்ணமில்லாது மற்றொரு பழத்தையும் இடுக எனக் கேட்டது வியப்பன்று, அம்மையார் அங்ங்ணமே சென்று இறைவனை வேண்டிப் பெற்று மற்றொரு கணியளித்தார், அதன் சிவை வேறுபர்ட்டை அறிந்த அவன், இது முன் தரு மாங்கனி iன்று என்று கூறி, எய்தவருங் கினியளித்தார் யார்? என்று கேட்டுவிட்டான். - - அறிவுடையனாக இருப்பின், கணியளித்தார் யார்?' என்று மனைவியைக் கேட்டிருக்கமாட்டான். எங்குக் கிடைத்தது ஏன்று கேட்பதற்கும் யார் தந்தார், என்று கேட்பதற்கும் வேறுபாடு மிகுதியும் உண்டு. அவன் மன்த்தில் தோற்றிய் ஐய்த்தை இவ்வினா உருவர்க்கிவிட்டது. அத்தகைய அறிவிலிக்கு, அம்மையார் இறை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/216&oldid=751031" இலிருந்து மீள்விக்கப்பட்டது