பக்கம்:இலக்கியக் கலை.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 இலக்கியக் கலை வனருளால் பெற்ற வரலாற்றைக் கூறினார். அவன் அதை தெரிந்து கொள்ளவில்லை. அம்மட்டோடு. நிற்கவில்லை. தான் நம்பவில்லை என்பதைக் கூறியும் விடுகிறான். கூறுமளவோடு நிற்கவுமில்லை. அவ்வாறாயின் அக்கடவுளருளால் மற்றும் ஒரு கனி வரவழைத்துத் தருக என்றும் கூறிவிட்டான். இந்நிலையில் ஒரு கணவன் பேசினால், ஒரு கற்புடை மடந்தைக்கு மனம் எவ்வாறு இருந்திருக்கும்? நடைபெற்ற செயலும் அற்புதமான தொன்று. ஆனால் அம்மையார் மனம் சிறிதும் சலிக்கவில்லை முகத்தில் விளக்கம் எப்பொழுதும் போல் இருந்தே வந்தது. இதனைக் கவிஞர் குறிக்கிறார். எவ்வாறு? அவருக்கே உரிய தனி வழியில் கூறுகிறார். முன்னர்க் கூறியபடி காரைக்காலம்மை யாரைத் திருமகளுக்கு உவமிக்கிறார். அங்கனம் கூறுமுகத்தால் அவர்து மனநிலையையும் முகநிலையையும் கூறாமற் கூறுகிறார். சசன் அருள் எனக்கேட்ட இல்லிறைவன் அதுதெளியான் வாசமலர்த் திருவனையார் தமைநோக்கி, மற்றிதுதான் - - தேசுடைய சடைப்பெருமான் திருவருளேல் இன்னமும்ஒர். ஆசில்கனி அவன் அருளால் அழைத்தளிப்பாய்' எனப் புக ன்ற тоёт. (ചെ. .با காரை-29) @இல்லிறைவன் என்ற ೧೮rುಖಗಡಿಮಿಡಿಲು 067b ஆகிப் L്രങ്ങ ينة நாள் ஆகியும், மனைவியின் மனநிலையை அறிய வன்மையும் வகைய்மற்று இருந்தவன் என்பதும், அவரது உடலின்பத்தை மட்டுமே கருதி வாழ்ந்தான் என்பதும். எனவே விட்டிற்கு மட்டும் தலைவனாக வாழ்ந்தான் என்பதும் பெற வைத்தாராயிற்று. அந்நிலையிலும் அவர் வாசமலர்த் திருவனையாராக நின்றார் என்றால் அவரது மனத்திட்பத்தைக்குறிக்க வேறு என்ன வேண்டும்? இத்தொடருக்கு மேல்நோக்க்ாகப் பொருள் கண்டு சென்றுவிட்டால் கவிதையை உணராதவர்களாக ஆகிவிடுவோம். மலையே வந்து விழினும் மனிதர்காள், நிலையில் நின்று கலங்கப் பெறுதிரேல் என்ற சீரிய பண்பு சிலருக்கே அமையக் கூடியது. அந்நிலையுடையார் அம்மையார் என்பதை இதனைத் தவிர வேறு - எவ்வழியில் கூறஇயலும்: அம்மட்டோ? அறுபது வயது சென்ற ஒர் அம்மையை நோக்கி அக்கேள்விகள் கேட்கப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/217&oldid=751032" இலிருந்து மீள்விக்கப்பட்டது