பக்கம்:இலக்கியக் கலை.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

هد. ه" இசைச் சிறப்பு 367 கொண்டோம். அவ்வாறு படிக்கும் பொழுது கண்ணில் காணும் வரிவடிவம் ஒலியை உணர்த்த, ஒலிபொருளை உணர்த்த நாம் அடுத்துப் பொருளை உணருவதில்லை. அதற்கு மறுதலையாக நேரே வரிவடிவத்தைக் கண்டவுடன் பொருளை உணர்ந்து கொண்டோம். இத்தகைய வன்மை சிறந்ததாயினும் கவிதையை அநுபவிக்க இது ஏற்றதன்று. மேலே காட்டியுள்ள பாடலை வாய்விட்டு உரக்கப் படித்தால் தோன்றும் இன்பம் மனத்திற்குள் படித்தால் உண்டாகாது. கீழ்வரும் பகுதியைப் பொருளைப்பற்றிக் கவலைப்படாமல் படித்துக் காண்க : - ஆரம் முழுமுதல் உருட்டி வேரற் - - ஆவுடை அலங்குசினை புலம்பவேர் கீண்டு விண்பொரு கெடுவரை பரிதியின் தொடுத்த தண்கமழ் அலர் இறால் சிதைய கன்பல ஆசினி முதுசுளை கலாவ மீமிசை ங்ாக நறுமலர் உதிர ஊகமொடு மாமுக முசுக்கலை பனிப்பப் பூநுதல் இரும்பிடி குளிர்ப்ப வீசிப் பெருங்களிற்று முத்துடை வான்கோடு தழீஇத் தத்துற்று ஆமா நல்லேறு சிலைப்பச் சேனின்று இழும் என இழிதரும் அருவி. (முருகாற்றுப்படை) அருவி விழும் ஓசை காதில் விழுகிறதா? சொற்களின் ஒசை அவ்வாறு அமைக்கப்படுகிறது. ஒருவாறு படிப்பவர்க்கு மிகவும் கடினமாகத் தோன்றினாலும் விரைவாக இவ்வடிகளைப் படித்தால் ஒருவகை ஒலி உண்டாவதைக் கேட்கலாம். அவ்வொலி எத்தகையது? ஆசிரியரே விடை கூறுவார் போன்று இழும் என இழிதரும் அருவி என்று கூறிவிட்டார். அருவி அடித்துக்கொண்டு வருகிற பொருள்களைப் பாடலின் சொற்கள் கூறுகின்றன. முன்னர்க் காட்டிய உதாரணத்தில் சொற்பொருளும் ஒசைப் பொருள் வேறு ஒசைப்பொருள் வேறு. மனத்துள்ளே படித்துப் பார்த்தால் பொருளின் ஒரு பகுதியை இழந்துவிடுவோம். ஒசை காட்டும் உலகை அறியாதுவிட நேரிடும். ... - - - - 'யான்ை தாக்கினும் அரவுமேற் செலினும் ல்ேகிற விசும்பின்வல்ஏறு சிலைப்பினும்' (பெரும்பாணாற்றுப்படை 1862

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/226&oldid=751042" இலிருந்து மீள்விக்கப்பட்டது