பக்கம்:இலக்கியக் கலை.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 இலக்கியக் 56ಕಣ ஆனால் காதல் உணர்ச்சியில் ஈடுபட்டவர் இவ்வளவு விரைவாக நினைத்துக்கொண்டு போதல் இயலாத காரியம். அதிலும் பிரிந்து வருந்தும் பாலைத் திணையில் உள்ளவர் நினைவைக் கூறவேண்டிய இடத்தில் இத்தகைய ஆசிரியப்பா அவ்வளவு சிறந்ததாக இருக்க இயலாது. குற்றெழுத்துக் களையே பயன்படுத்தினாலும் அங்குள்ள ஓசையே வேறு. தலைவி மழைக்காலத்தைக் கண்டு வருந்துகிறாள் பார்க்கப் போனால் கார்காலம் தலைவனும் தலைவியும் ர்ேர்ந்து வாழ வேண்டிய காலம். அந்தக் காலத்தில்கூடத் தலைவனைப் பிரித்து வைத்திருக்கும் இக் கார்காலத்தின் கொடுமை தான் என்ன? அங்கு உயிரும் இங்கு உடலும் ஆனமழைக் காலம் அவர் ஒருவர் நாம்ஒருவர் ஆனமழைக் காலம்’ (நந்திக்கலம்பகம்) நம்மையும் அறியாது. குற்றெழுத்துக்களுக்கு மாத்திரை ஒன்றுதான் என்பதையும் மறந்து அங்கு, இங்கு, அவர், உயிர், ஒருவர் முதலிய சொற்களில் உள்ள குற்றெழுத்துக்கட்கு மூன்று மாத்திரைகள் கூடக் கொடுத்துப் பாடி மகிழுகிறோம். 'ஆனழுழைக் காலம் என்ற சீர்களில் உள்ள நெட்டிெழுத்துக்கள், தலைவனோடு சேர்ந்திருந்த சென்ற மழைக்காலத்தைப் பிரிந்திருக்கும் இந்த மழைக்காலத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும் தலைவியின் மனநிலையை நமது கற்பனையில் காட்டுகின்றன. இத்தகைய, மனநிலைகளைச் சங்க காலத்தில் ஆசிரியப் பாக்களிலும், பாடி உள்ளனர், கலி போன்ற பாக்களிலும் பாடி உள்ளனர். ஆனால் கலிப்பாடல்களில் இவ்வுணர்ச்சிகள் வடிவு பெறுதல்போல் ஆசிரியப்பாக்களில் அழகு பெறு வதில்லை. இளவேனிற்காலம் வந்தும், தலைவன் வந்த பாடில்லையே எனத் தலைவி வருந்துகிறாள். அவ்வமயம் தோழி ஒரு சமாதானம் கூறுகிறாள்: "வருந்த வேண்டாம் தோழி! உலகத்தில் உள்ளவர் நாவில் எல்லாம் தங்கி இருக்கும் சிறப்புப் பொருந்திய மதுரையிலுள்ள மக்கள், புலவர்கள் வாயில் தோன்றிய புத்தம் புதிய கவிதைகளை அநுப்விக்கும் இளவேனிற்காலமல்லவோ தலைவர் வருகிறேன் என்று உரைத்த காலம்? எனவே அவர் வந்துவிடுவார்!" என்று கூறுகிறாள் தோழி. இங்ங்ன்ம் கூற அவளுக்கு எத்தகைய ஆதிர்மும் இல்லை. என்வே தனது கருத்தைத் தலைவி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/229&oldid=751045" இலிருந்து மீள்விக்கப்பட்டது