பக்கம்:இலக்கியக் கலை.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியம் : அறிமுகம் 7 வடமொழியில், இலக்கணத்தைச் சுட்டுவதற்கு, எக் காலத்தி லும் 'லக்ஷண எனும் வடசொல் பயன்படுத்தப் படவில்லை. அம் மொழியில் சந்தஸ் வியாகரண’ எனும் இரு சொற்களே எழுத்து சொல் இலக்கணங்களைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றைப் போன்றே, காவ்யா சாஹித்ய எனும் இரு சொற்களால் நாம் போற்றும் இலக்கியத்தை வடமொழி வாணர்கள் சுட்டிவருகின்றனர். இந்த உண்மைகளைக் கருத்தில் கொண்டு நோக்கும்பொழுது லாrண லக்ஷய' எனும் இரு சொற்கள் மேற்கண்ட பெர்ருள்களில் வடமொழியில் வழங்கப்பட வில்லை என்பது உறுதிபடுகிறது. இந்நிலையில், மூலமொழியில், இப்பொருளில் ஆட்சியில் இல்லாத இருசொற்களைப் பண்டைத் தமிழர் கடன் வாங்கி புதிய பொருள்களில் அவற்றைப் பயன் படுத்தினர் எனக்கூறுவது எவ்வாறு பொருந்தும்? தமிழில் புதிய பொருள்களில் வழங்கப்பட்டுவரும் இரு சொற்களின் மூலத்தைப் பிற மொழி ஒன்றில் தேடுவது வியப்பிற்குரிய செய்தியாகும். பாவும் பனுவலும் செய்யுளும் நூலும். மேற்கண்ட கருத்துகளில் இருந்து இரண்டுவகை ஐயங்கள் எழுகின்றன. முதலாவதாக, இ லக் கி யம்' எனும் கலைப் படைப்பைப் பண்டைத் தமிழறிஞர்கள் அறியாதவர்களா? எனும் எண்ணம் எழுவது இயற்கை. பத்துப்பாட்டையும் எட்டுத்தொகை யையும், காப்பியங்களையும், பக்திப் பாடல்களையும் தமிழ் மக்கள் படைத்துள்ளனர். இதனால், இலக்கியம் படைப்பதில் அவர்கள் சிறந்து விளங்கினார்கள் என்பது புலனாகிறது. அடுத்து, வேறு எந்தச் சொல்லினால் நாம் பேர்ற்றும் "இலக்கியத்தை அவர்கள் சுட்டினார்கள்?' எனும் கேள்வி எழுகிறது. இதனைப் பொருத்தமான வினாவாகக் கொள்ளலாம். பழைய தமிழில், பா, பாட்டு, செய்யுள், பனுவல், நூல் எனும் சொற்களால் இலக்கியம் சுட்டப்பட்டதைக் காணுகின்றோம். செய்யுள்' எனப்படும் சிறப்புப் பெயராலேயே, தொல்காப்பினார் இலக்கியத்தைக் குறிப்பிட்டுள்ளார். தொல்காப்பியப் பொருளதி காரத்தில், செய்யுள் இயல்’ எனும் பகுதி முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. அந்தச் செய்யுளின் உறுப்புகளாக முப்பத்து நான்கினை அவர் வகுத்துரைத்துள்ளார்." - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/23&oldid=751046" இலிருந்து மீள்விக்கப்பட்டது