பக்கம்:இலக்கியக் கலை.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒசைச் சிறப்பு 211 ஏற்றுக்கொள்வாளோ மாட்டாளேர் என்பதைச் சந்தேகித்து மெள்ள மெள்ளத் தன் கருத்தை வெளியிடுகிறாள். இவ்வுண்மையை ஆசிரியர் ஒசையில் வைத்துக் கர்ட்டுகிறார். பதினைந்து நெட்டெழுத்துக்களைப் பெய்து இருவர் மனத்திலும் தோன்றும் ஐயத்தை வ்ெளியிடுகிறான் கவிஞன். மேலும் இந்நெடில்கள் மதுரையின் சிறப்பையும் காட்டுவனவாக உள்ளன. கிலநாவில் திரிதரூஉம் நீண்மாடக் கூடலார் புலங்ாவில் பிறந்தசொல் புதிதுண்ணும் பொழுதன்றே பலநாடும் நெஞ்சினேம் பரிந்துநாம் விடுத்தக்கால் சுடர் இழாய் நமக்கவர் வருதும்என்று உரைத்ததை' (பாலிக்கலி, 84) I உலகில் உள்ளவர் அனைவரும் கூறும் மதுரையில் உள்ள மக்கள் தமிழ்ச் சங்கத்திலிருந்து வெளிவரும் புதிய பாடலைப் - படிக்கின்ற நாளில் அல்லவா தலைவர் வருகிறேன் என்று. கூறினார்.1 எதுகுலகாம்போதி இராகத்தில் இதனைப் படித்துப்பார்த்தால் உண்மை விளங்கும். இத்தகைய கருத்தை ஆசிரியப்பாவில் கூறின்ால் எவ்வளவு முயன்று கூறினும் பொருள் விளங்குமே தவிர இவ்வுணர்ச்சி பிறக்காது. காரணம், கருத்துக்கும் உணர்ச்சிக்கும் ஏற்றதாக இசை இல்லாது போன்மையே ஆகும். எனவே ஓசை காட்டும் உலகம் பொருள் கர்ட்டும் உலகின் வேற்ாயினும் இவை இரண்டும் ஒன்றுபட்டவழித் தோன்றும் கவிதையே தலையாயது என்பதை உணருகிறோம். 3 × مwم تما *** 1. Bythm

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/230&oldid=751047" இலிருந்து மீள்விக்கப்பட்டது