பக்கம்:இலக்கியக் கலை.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையும் பொருளும் 218 பொருள். பொருளின் அடிப்படையில் இருப்பது உணர்ச்சி. எனவே பொருளில்லாத கலைஅல்லது கவிதை என்பது ஆகாயப் பூப்போல்வ. தோர் இல்பொருளாம். பொருளை நன்கு விளக்காச் சொற்கள் சிலர், சில கவிதைகளைப்பற்றிக் கூறுகையில், கலைச் சிறப்பு மிகுதியும் உண்டு, பொருட்செறிவு இல்லை என்றும் இதற்கு மறுதலையாயும் கூறக்கேட்கிறோம். இதுவும் பொருந்தாக் கூற்றே. ஏனெனில் கலைஞனது மனக்கருத்தை நமக்கு வெளியிடும் சாதனம் கலையே. வேறு எவ்வழியில் அவன் கூறவந்த பொருளை நாம் அறியமுடியும்? எனவே கலை சிறக்கவில்லை என்றால் அவன் கூறவந்த பொருளும் சிறந்ததன்று என்ற முடிபுக்குத்தான் நாம், வரவேண்டும். இன்னும் சிலபாடல்களைப் படிக்கிறோம். கவிதைகள், என்ற கட்டத்தில் அவை சேர்க்கப்பட முடியா என்றாலும் அப் பாடல்களைப் படித்தவுடன் நாம் ஒருவாறு பொருளை ஊகித்துக் கொண்டு ஆசிரியன் இன்ன பொருளைத்தான் குறித்திருக்க வேண்டும். எனினும் அது விளக்கமாகவில்லை என்று நினைக்கி, றோம். ஆனால் இங்கனம் கூறுகையில் நமது கருத்தை அவனது. பாடலில் ஏற்றுகிறோமே. தவிர அவனது கருத்து இதுவே என்று சொல்வதற்கு ஆதாரமில்லை. ஒருவேளை அவன் கூறவந்த பொருள் வேறாகவும் இருக்கலாம். பொருளைச் செம்மையாக வெளியிடாவிட்டால் அவனது கலையும் சிறந்ததன்று என்றே: துணியவேண்டும். சிறந்த கவிதைக் கலையில் கவிஞன் பொருளை வெளியிடுவதற்குரிய சாதனம் என்ன? அச் சாதனம் சொல்லே. பொருளை வெளியிடும் கருவி. ஆனால் சொல் குறிக்கும் பொருள் 绶。 ஒரு சொல்லை நம் காதால் கேட்டவுடன் அவ்வொலி நம்: காதின் வழி நுழைந்து மனத்துள் ஒரு படத்தைத் தோற்றுவிக்கிறது. அப்படமே சொல் குறிக்கும் பொருளாகும். மலை, கடல், ஆறு என்ற சொற்களை வீட்டினுள் இருந்துகொண்டே காதாற் கேட்பினும், நம் மனத்துள் அவற்றின் படம் தோற்றுவிக்கப் படுகிறது. இதுவே சொல்லுக்குள்ள சக்தியாகும். அவ்வாறு நம் மனத்தால் பொருளை அறிவதற்கு, நாம் முன்னரே அப்பொருளைக் கண்டு அந்துபவித்திருக்க வேண்டும். மேலும் அச்சொல்லோடு அப்பொருளைச் சேர்த்து. இச்சொல் இப்பொருளைக் குறிக்கிறது என்றும் கண்டிருக்க வேண்டும். இன்றேல் அகராதியைப் புரட்டிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/232&oldid=751049" இலிருந்து மீள்விக்கப்பட்டது