பக்கம்:இலக்கியக் கலை.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214. இலக்கியக்கலை பார்த்துச் சொல்லின் பொருளை அறிகிறோம். எனவே சொல்லும், அது குறிக்கும் பொருளுமே கவிதைக்கு அடிப்படையாகின்றன. t - . & ... - * t - - $ 参、 சுருங்கக் கூறுமிடத்து; எங்கே சொற்கள் தமக்குரிய பொருட்செ றி, வோடும் எண்ணத்தைத் தோற்றுவிக்கும் சக்தியோடும் காணப்படு கின்றனவோ, எங்கே சொற்கள் ஒரு செயல் நேரே நடைபெறுவது போன்ற காட்சியை மனத்துள் தோற்றுவிக்கின்றனவோ அங்கே கவிதைக் கலையைக் காண்கிறோம். கவிஞன் ஏற்றும் சொற்பொருள் சொல்லையும், அது குறிக்கும் பொருளையும். நாம் வழங்கும் முறையும் கலைஞன் பயன்படுத்தும் முறையும் வேறு வேறு. 'தண்ணிரில் சங்குகள் வாழுகின்றன. நிழலில் எருமைகள் உறங்குகின்றன திருமகள் தாமரையில் உறை கின்றாள். இவ்வாக்கியங்களின் பொருள் கடினமானவை அல்ல. உரைநடையில் . இவ்வாக்கியங்கள் பயிலப் படுமேயானால், இவற்றின் பொருளும் சுருங்கிவிடுகிறது. ஆனால் இவற்றையே கவிஞன் ஒரு கவிதையில் பயன்படுத்துகையில் அவற்றின் ஆற்றலே. வேறாகிவிடுகிறது. அப்பொழுது இந்தச் சொற்களுக்கு அகராதியில் சானும் பொருள் மட்டும் பயன்படுவதில்லை. முன்னர்க் கூறிய ஒலிப்பொருள், கருத்துப் பொருள் என்ற இரண்டும் தவிரச்சொல் தோன்றும் இடத்திற்கேற்ப இடப்பொருளும் தோன்றுகிறது." கருத்துப்பொருளாகிய ஒன்றைத் தவிர ஏனைய இரண்டும் எளிதில் அறியக்கூடியன் அல்ல. அந்தப் பொருள்கள் பாடலில் அன்மந்து கிடக்கும் முறையே ஒரு தனிச் சிறப்பாகும். இப்பொருள்கள்ை அறிவதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. பைபிளில் கூறப்பட்ட' கேள் : கொடுக்கப்படும்," "தட்டு : திறக்கப்படும்' என்ற வழியே மேற்கொள்வோம்ேயர்னால் இவ்வுண்மை விளங்கும். ஒர்.உதாரண முகத்தில் இவ்வுண்மையை ஆராய்வோம். 'நீரிடை உறங்கும் சங்கம்: கிழலிடை உறங்கும் மேதி தாரிடை உறங்கும் வண்டு; தாமரை உறங்கும் செய்யாள் துரிடை உறங்கும் ஆமை துறையிடை உறங்கும் இப்பி போரிடிைஉறங்கும்.அன்னம் பொழிலிடை ட்ற்ங்கும் தோகை' (கம்பன். நாட்டுப்படலம்-6)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/233&oldid=751050" இலிருந்து மீள்விக்கப்பட்டது