பக்கம்:இலக்கியக் கலை.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையும் பொருளும் 315 கம்பனது அரிய காவியத்தில் நாட்டுப்படல்த்தில் இக்கவிதை' தோன்றுகிறது. இதன் பொருளும் எளிதில் விளங்குவதாகவே உள்ளது." சாதாரணமாக நாட்டின் நீர்வளம் நிலவளம் முதலியன. கூறப்பட்டிருக்கின்றன என்றுகூறிவிடலாம். அவ்வாறு கூறி. விட்டால் நேரும் இழுக்குஒன்றுமில்லை. ஆனால் முற்கூறியவாறு - கேட்காமலும் தட்டாமலும் சென்றால், அது நம்முடைய இழப் பாகவே முடியும். இத்தகைய கவிதைகளை “ம்ாதுளம் பழம்" என மகர்வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் கூறுவதுண் டென டாக்டர் ஐயரவர்கள் எழுதியிருக்கிறார்கள். மாதுளையை உடைத்து ஒவ்வொரு தோலாக நீக்க நீக்க மணிகள் அகப்படுமாறு போல, இக் கவிதைகளில் பொருளும் கிடைக்கும். மேலும் பார்ப் பதற்கு மிக எளிமையாகக் காணப்படுகிற பாடல்களில் இத்தகைய் பொருளும்கிடைக்கும். எளிமையாக இருத்தலின் யாரும் நின்று ஆர்ாய்வதில்லை. ஆதலின் அதன் ஆழமும் அறியப்படுவதில்லை. இவ்வுண்மையை அ றியவும் கவிஞன் உதவுகிறான். தாம்பிரவருணி என்றழைக்கப்படும் பொருநை ஆற்றைக் கண்டவர்களுக்கு ஓர். உண்மை தெரிந்திருக்கும். மிகத் தெளிவாக இருத்தலின் நீரின் உண்மையான ஆழம் தெரிவதில்லை. ஆனால் தெரியவேண்டும். என்ற விருப்பத்தால் இறங்கினால் நினைந்த அளவிற்குமேல் பன்மடங்கு இருப்பதுதெரியவரும். இக்கருத்தையே கம்பநாபிர், சான்றோர் க்வியெனக் கிடந்த கோதாவரியினை விரர் . கண்டார் என்ற இடத்தில் கூறுகிறார். மேலிருந்து நோக்குபவர் உண்மை ஆழத்தை மிகக் குறைவாக மதிக்குமாறு எளிமையாகக் காண்ப்பட்டு உண்மையில் மிக்க் ஆழமுடையதாகவுமுள்ள கோதாவரி சான்றோர் கவிக்கு உவமையாயினவாறு காண்க. எனவே மேலே காட்டிய, "நீரிடை உறங்கும்." சங்கம்" என்ற பாடல் எளிமையாக உள்ளது என்ற காரணத்தால் வெறும் வருணனை என்று ஒதுக்கிவிடாமல், அதனிடத்துச் சில உண்மைகளைக் காண்போம். இத்தகைய சந்த்ர்ப்பங் களில் பெரிதும் . ப்யன்படுகிற வினா "ஏன்?" என்பதே ஆகும். ஏன் இதை, இங்கு, இவ்வாறு கவிஞன் கூற. வேண்டும் என்ற வினாக்களை எழுப்பின் உண்மை விளங்கும். நாட்டின் வளம் கூறவந்த கவிஞன், சங்கு, எருமை என்ற இரண்டை யும் கூறுவது வியப்பே. வண்டும் செய்யாளும் १ கூறப்படுவதை o அறிவோம். ஆனால்: மேதியைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/234&oldid=751051" இலிருந்து மீள்விக்கப்பட்டது