பக்கம்:இலக்கியக் கலை.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையும் பொருளும் 219. தருகிறான். எ ம் மு ைற யி ல் அவ் விடை அமைகிறது? நேரடியாகச் சிந்தையின் நிறைவுடையார் கோசலர் என்று கூறி இருக்கலாம். அங்ங்னம் கூறின் அது க்விதையும் ஆகாது. அவன் கம்பனும் ஆகர்ன். அவன் தனக்கே உரிய த னி மு ைற யி ல் “தாமரை உறங்குஞ், செய்யாள்" என்று கூறிவிட்டான். இதுவா விடை? ஆம்; இதுவே சிறந்த விட்ை! மக்கள்.மேலும் மேலும் செல்வத்தைத் தேட முயலுவார். களேயாயின் திருமகளுக்கன்றோ அங்கு வேலை மிகுதி நாடு, பிடித்து ஆளவேண்டுமென்ற விருப்பம் மக்கட்கு இருப்பின் வெற்றித் திருவுக்கன்றோ வேலை மிகுதி? பசிய்ால் வருந்தும் மக்கள் இருந்து, உணவு அகப்பட்ாதர் என் வருந்தி நிற்பர் களேயர்யின், தான்ய இலக்குமிக்கன்றோ வேலை மிகுதி: இங்ங்ணம் பலபடியாகப் பிரித்துக் கூறப்படும், திருமகளுக்குச் செய்யாள் என்றதொரு பெயர் உண்டன்றோ? கோசல நாட்டு மக்கள், எல்லாச் செல்வமும் பெற்று, போதும் என்ற ப்ெர்ன் செய்யும் மனமுடையவராய், அமைதி நாடுபவராய் அன்பு நிறைந்தவராய் பிறர் வாழவேண்டுமென்று எண்ணுபவராய், வையத்து வாழ்வாங்கு வாழ்பவராய் இருத்தலினால் திருமகளை விரும்பியழைப்பார் அந்நாட்டில் ஒருவரும் இலர். ஒருவரும் தன்னை அழையாமற் போகவே தனது இருப்பிடமாகிய தாமரையில் உறங்குகிறாள் செய்யாள்! இதுவரைக் கூறியவற்றிலிருந்து கவிதையின் இரண்டு அடிகளிலே நாட்டு வளம், நீர்வளம், மக்கள் வளம், வாழ்க்கை வளம், அவர்கள் மன வளம் ஆகிய அனைத்தும் சொல்லப்பட்டமை காண்க. இவையனைத்தும் கவிதை தன்னகத்து அடக்கிக்கொண் டிருக்கும் பொருள்களே. கேட்ட மாத்திரத்தில் அவை வெளிப்படு கின்றன. சிறந்த கவிதை எனப்படுவது இத்தகைய பொருட் செறிவுடையதாய்த் திகழும். சிறந்த கவிதையைப்பற்றிக் கூறவந்த பேராசிரியர். ஏ.சி. பிராட்லி என்பார் கீழ்க்கண்டவாறு கூறுகிறார். "சிறந்த கவிதையில் எண்ணற்ற எண்ண ஊட்டல்கள் நிறைந்துள்ளன. ஏதோ ஒன்றைத்தான் கவிஞன் பாடுகிறான். ஆனால் அந்த ஒன்றினுள் பல அமைந்து கிடத்தலைக் கர்ண முடிகிறது. அவன் கருத்தில் உள்ள கற்பனை ஆழம் நம் கருத்தை யும் தாண்டிச் சென்றுவிடுகின்றது; எல்லையற்று விரிந்து செல்கின்றது. விரிந்து செல்லும் இது அவன் கவிதையில் தொகுத்துச் சுட்டப் பெற்றுள்ளது; ஆதலின் அது நம்மையும் நமது மனத்தையும் அகத்தும் புறத்தும் குளிர்விக்கிறது." .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/238&oldid=751055" இலிருந்து மீள்விக்கப்பட்டது