பக்கம்:இலக்கியக் கலை.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 இலக்கியக் கலை இந்தச் செய்யுளுள் பர்க்களும், பர்ட்டுகளும் அவரால் அடக்கப்பட்டுள்ளன. இவை இரண்டும், அக்காலத்தில் வெர்ஸ் (Werse) எனும் ஆங்கிலச் சொல்லின் பொருளில் பயன்படுத்தப் பட்டுள்ளமை புலனர்கிறது. காலப்போக்கில் தமிழ் இலக்கியம் எல்லாம் பாவாலும், பாட்டுகளாலும் படைக்கப்பட்டு வந்தமையால், செய்யுள் என்னும் சொல்லின் சிறப்புப் பொருள் குன்றி ‘பா’ எனும் சொல் வழக்கிற்கு வந்திருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. தொல்காப்பியரே பர்' என்பதற்குத் தந்துள்ள விளக்கம் வேறாகவும், செய்யுளுக்குத் தந்துள்ள விளக்கம் மற்றொரு வகையாகவும் அமைந் துள்ளமை இங்குக் கருதத்தக்கது. ‘பா’ எனும்சொல்லிற்குச் சேட்புலத்து இருந்தகாலத்து ஒருவன் எழுத்தும் ச்ொல்லும் தெரியாமல் பாடம் ஒதுங்கால், செய்யுள் என்று உணர்தற்கு ஏதுவாகிய பரந்துபட்டுச் செல்வ தோர் 11 دوبي وهي எ ன் று பேராசிரியர் எனும் உரையாசிரியர் தந்துள்ள விளக்கம் புதிய ஒளியைப்பாய்ச்சுகிறது. மரபியலில் தொல்காப்பியனார் நூல்' என்பதற்குத் தந்துள்ள விளக்கங்கள் பேரளவிற்கு இலக்கணத்திற்கும் ஓரளவிற்கு இலக்கியத்திற்கும் பொருந்துவனவாக உள்ளன. எனினும் செய்யப்படுவது: (Composition) எனும் பொருளைத் தரும் செய்யுள் எனும் சொல்லாலேயே, அந்தக் கால இலக்கியப் படைப்புகளை, அவர் சுட்டியுள்ளார். எழுதப் படுதலின் எழுத்தே' எனும் பழஞ் குத்திரத்தின் வழிநின்று, செய்யப்படுவது செய்யுள்' பன்னிப்பன்னி உரைக்கப்படுவது பனுவல் (கருத்திணை) எனும் புதிய நூற்பாக்களைக் கருத்துத் தெளிவிற்காக நாம் படைத்துக்கொள்ளலாம். - - திருவள்ளுவர் காலத்தில் (கி.பி. இரண்டாம் நூ. ஆ நூல்' எனும் சொல்லே, இலக்கியம்' எனும் பொருளில் பயன்படுத்தப் பட்டுள்ளமை யாவரும் அறிந்த உண்மை. கவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடையாளர் தொடர்பு" (திருக். 783) இக்குறட்பா படிக்கப் படிக்கப் புதிய புதிய பொருள் நயத்தையும் சொல் நயத்தையும் தரும் கவின்மிகு கலைப்படைப் புகளான இலக்கியங்களையே சுட்டுகிறது என்பதில் கருத்து வேற்றுமைக்கு இடமில்லை. - o

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/24&oldid=751057" இலிருந்து மீள்விக்கப்பட்டது