பக்கம்:இலக்கியக் கலை.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் : 18 குண்டூசியும் குமரி முனையும் . . ". . (జీణsefu பொருள் எதுவாக இருக்கவேண்டும் என்ப்தைப்பற்றி ஆராய்வோம். குண்டுசியைப் பற்றியும் கவிதை எழுதலாம். குமரிமுனையைப்பற்றியும் கவிதை எழுதலாம். இப்பொருள்களை மட்டும் வைத்துக்கொண்டு குண்டுசி கவிதைக்கு ஏற்றதன்று என்றும், குமரிமுனை சிறந்த கவிதை தோன்றுவதற்கு ஏற்ற பொருள் என்றும் முடிவு செய்துவிடக்கூடாது. J - கவிதைக்குரிய பொருள் கவிதைக்குரிய பொருள் எது என்பதைப்பற்றி ஆராயு முன் எதனைப் பொருள் என்று கூறுகிறோம் என்பதையும் கர்ணவேண்டும். ஒரு கவிதையின் தலைப்பைக் கொண்டே அது இதைப்பற்றிக்கூறவேண்டும் என்று முடிவு செய்கிறவர்கள் உண்டு, ஒருவாறு நல்ல அநுபவமுடையவர்கள் இதைச் சரியாகக் கூறமுடியும். திருமுருகாற்றுப்படை என்ற தலைப்புைக் கண்டவுடனேயே நூலைப் படியாத ஒருவர் இது முருகனைப்பற்றிக் கூறும் நூல் என்று கூறிவிடலாம். ஆனால் சிந்தாமணி என்று கேட்டால் அது சீவகன் சரிதஞ் சொல்லும் காவியம் என்பதை அனைவரும் கூறிவிட முடியாது. தலைப்பும் உட்பொருளும் பல சமயங்களில் கவிதையின் தலைப்பு நமக்குப் புரியாத தாக இருத்தல் கூடும். மலைபடுகடாம் கரி விருத்தம்", நெடுநல்வாடை என்ற தலைப்புக்கள் இப்பாடல்களைக் கல்லாதவர்களுக்கு என்ன உணர்வுை உண்டாக்கக் கூடும்? இப்பாடல்களை மேல்நோக்காகப் படித்தவருக்குக்கூட இந்தத் தல்ைப்புக்கும் கவிதைகூறும் பொருளுக்கும் உள்ள தொடர்பு இலேசில் விளங்காது. என்வே இத்தகைய தலைப்புகளைக் கண்டவுடன் அநேகமாகக் அகவிதையும் இன்னதைப்பற்றிಕ್ಷಿಣೆ ான் கூறவேண்டும் என்று நம் மனத்தில் ஓர்ன்ேனம் தோன்றும். அவ்வெண்ண்ம் பெரும்பாலும் கவிதிைக்குப் புறத்தே உள்ளதேயாகும். அக் க்வின்த்iல் சுற்ப்ப்டும் பொருள். அத்தலைப்பைக் கேட்டவுடன் தம்து மனத்தில் தோன்றும் பொருள் அன்று. " . . . . . . . . . . . * * * *

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/240&oldid=751058" இலிருந்து மீள்விக்கப்பட்டது