பக்கம்:இலக்கியக் கலை.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22级 இலக்கியக் கலை சில சமயங்களில் நமது மனத்தில் தோன்றும் பொருளும் கவிதையில் கூறப்பட்ட பொருளும் ஒன்றாக இருக்கலாம். ஆனால் அத்தகைய நியதி ஒன்றும் இல்லை. உதாரணமாக, 'மலைபடுகடாம்' என்ற சொல்லுக்கு அகராதியைப் புர்ட்டிப் பார்த்தால், மலையில் பொழிந்த யானையின் மதநீர் என்ற பொருளைப் பெறலாம். ஆனால் இதனை அறிந்தவுடன் இத் தலைப்புடைய கவிதையில் ஆசிரியன் கூறியுள்ள பொருளை நாம் அறிந்துகொள்ள முடியாது. யானையின் மதநீரைப்பற்றிக் கூறுவது அன்று மலைபடுகடாம். எனவே தலைப்பும் கவிதைப் பொருளும் வேறாகவும் இருக்கலாம் என்பதை அறியவேண்டும். தலைப்பைக் கொண்டு கவிதையை மதிப்பிடுதல் இயலாத காரியம். அடுத்தபடி கவிதைக்குரிய பொருள். எது என்று பார்க்கலாம். எந்தப் போருளைப்பற்றி வேண்டுமானாலும் கவிதை தோன்றும். ஒரே பொருளைப்பற்றி மிகச் சிறந்த கவிதையும். தோன்றலாம்; மிக மட்டமான கவிதையும் தோன்றலாம். ஆதலால் பொருள்ை: மாத்திரம் வைத்துக் கிவிதையை மதிப்பிடுவது சிறந்த வழியன்று. ஆசிரியர் திருத்தக்க்தேவர் ஓடுகின்ற நரி ஒன்றைப் பார்த்து நரி விருத்தம் என்ற நூலைப் பாடினர்ராம். அதில் யாக்கை நிலையாமை, இளமை நிலையாமை முதலிய அருங்கருத்துக்கள் தோன்றுமாறு கவிதை புனைந்தார் மிகிச் சிறந்த அரசர் கள்ைப்பற்றிப்பதிற்றுப்பத்து என்ற நூல் கூறுகிறது. ஆனால் சில பகுதிகளைத் தவிர ஏனையவற்றைக் கவிதை என்று கூற முடியாது செய்யுள் என்றுதான் கூறவேண்டும். சாதாரண மான நரியைப்பற்றிச் சிறந்த கவிதையும், சிறந்த அரசனைப் பற்றி மட்டமான செய்யுளும் தோன்றியுள்ளன." எனவே iiதினைப்பற்றிக் கவிதை தோன்றுகிறதோ அப்பொருளின் பெருன்ம சிறுமைக்கு ஏற்பவே க்விதையின் பெருமையும் சிறுமையும் இருக்கும் என்று கூறுதல் முற்றும் 'பொருத்த முடையதன்று. குண்டுசியைப்பற்றிச் சிறந்த கவிதையும். அழகே வடிவான குமரி முன்னயைப்பற்றி மட்டமான செய்யுளும் தோன்றலாம். - கவிண்தசிறப்ப்து பொருளாலா! கவிதை சிறப்பது வேறு காரணங்களால்ேயே அன்றி அது தோன்றுதற்குக் காரணமான பெர்ருள்களால் மட்டும் அன்று. நமது நாட்டில் ஏதாவது ஒரு கவிஞனைப்பற்றிக் கூறுகையில். மற்ெ றாரு கவிதைப் பொருளை எடுத்துக் காட்டி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/241&oldid=751059" இலிருந்து மீள்விக்கப்பட்டது