பக்கம்:இலக்கியக் கலை.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குண்டுகியும் குமரி முனையும் *333 'இத்தகைய ஒரு விஷயம் அக்கவிஞன் கையில் கிட்டியிருக்கு மானால், சிறந்த கவிதையாக எழுதி இருப்பான். பாவம்! அவனது விஷயம் மிகவும் குறுகலானதொன்று. அவனுடைய கற்பனை விரிந்து செல்வதற்கு அவனது பொருள் இடங் கொடுக்கவில்லை' என்றெல்லாம் பேசுகிறவர்களை நாம் கேட்கிறோம். இங்ங்னம் கூறுவதை அறிஞர் ஏற்றுக் கொள்ள மாட்டார். அதற்கொரு காரணமும் உண்டு. இங்ங்ணம் கூறுகிறவர் தாங்கள் எதனைச் சிறந்த விஷயம் என்று நினைக்கிறார்களோ அந்த விஷயத்தைப்பற்றிக் கவிஞன் கூறவேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். இத்தகையோர் கவிதையை அநுபவியாமல் தம்மையே அநுபவிக்கப் பழகியவர். பலர், சில கவிதைகளைப் படித்து விட்டு, "இதை அப்படியே நான் நினைத்ததுண்டு என்றும் கூறக்கேட்கிறோம். இவர்களும் மேலே கூறிய இனத்தைச் சேர்ந்தவரே. கவிஞன் சொல்லியதை அநுபவியாது, தாம் நினைத்ததைக் கவிஞன் கூறியிருக்கிறானா என்று ஆராயும் இவர்களது மனப்பான்மை வியக்கத்தகுந்தது! அநுபவிக்கும் முறை இன்றைய ஆராய்ச்சியாளர் பலரும் இந்தப் பிழையைச் செய்தலைக் காண்கிறோம். எத்தனை கவிதைகள் இன்று சிலரால் வெறுத்து ஒதுக்கப்படுகின்றன? அங்ங்ண்ம் அவர்கள் அவற்றை வெறுப்பதற்கு என்ன காரணம் காட்டுகின்றனர்? கவிதையில் கூறப்பட்ட பொருள், மக்களால் வெறுக்கப்படும் ஒன்று என்பதே அவர்களது விடை கவிதையை அநுபவிக்கப் புகுந்து அதைச் செய்யாமல் தான் என்ற ஒன்றையும் தனது விருப்பு வெறுப்பு என்ற இரண்டையும் முன்னர் நிறுத்திக் கொண்டு ஏன் சலிப்படைய வேண்டும்? எடுத்ததற்கெல்லாம் தான், தன்னுடைய அநுபவம் என்ற இரண்டையுமே அளவு க்ே#லாகக் கொள்ளலாகாது. ஆனால் மிகப் பெரியவர்களும் இந்தப் பிழை யி வி ருந்து நீங்கினார்களில்லை. கம்ப ர்ாமாயணத்தைப் படியாத சைவர்களும், திருத்தொண்ட்ர் புராணத்தைக் கல்லாத வைணவர்களும், புறநானூற்றைப் படிக்க மறுக்கும் திறனாய்வாளர்களும் நம் நர்ட்டில், நிரம்ப உண்டு. ஏன்? எல்ல்ா நாட்டிலும் இத்தகையவர்" உண்டு. இலக்கியத் திறனாய்வில் பெயர்பெற்ற கோல்ரிட்ஜ் போன்ற பெரியவர்களும் இதே தவற்ற்ைசி செய்தனர். ஷேக்ஸ்பியரின் ஹாம்லத் நடத்திய ஆன்மப் போராட்டத்தைத் தந்து வாழ்க்கையில் துன்பத்தோடு " செய்த போராட்டித்தேள்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/242&oldid=751060" இலிருந்து மீள்விக்கப்பட்டது