பக்கம்:இலக்கியக் கலை.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£36 இலக்கியக் கலை கவிதையின் ஆழத்தை முற்றும் வெளிப்படுத்துவதற்குக் குண்டுசி யைக் காட்டிலும் குமரிமுனையில் அதிகச் சந்தர்ப்பங்கள் உள்ளன என்பதை எவரும் மறுக்கமுடியாது. கவிதை சிறக்கக் காரணமான முருகியல் அழகு குமரிமுனை போன்ற பொருள்களில் மிகுந் துள்ளன. இயற்கைக் காட்சியும், மக்கள் தம்மை மறந்து ஈடுபட்டு அநுபவிக்கும் இயல்பும் குமரிமுனையில் இருத்தலின் அத்தலைப்பு கவிதைக்கு மிகுதியும் ஏற்றதாகிறது. இத்தகைய பொருளைப் பற்றியும் சாதாரணக் கவிதை ஒருவன் எழுதுவானாயின் அவன் திறமை போதுமானதன்று என்று கூறுகிறோம். to கவிதை மனத்தில் சென்று தங்குவதற்கும், உணர்ச்சியை உண்டாக்குவதற்கும் சில் ஆதாரங்கள் தேவை. மனத்துக்கு முன்பே பழக்கமான சில காட்சிகளும், செயல்களும் உணர்ச்சியை மீட்டும் உண்டாக்க உதவுகின்றன. தனிப்பட்ட ஒரு பண்போ, இயல்போ மனத்தில் சென்று பதிந்து உணர்ச்சியை உண்டாக்குவதைக் காட்டிலும் மேலே கூறிய காட்சிகளும் செயல்களும் எளிதில் அக்காரியத்தைச் செய்யமுடியும். ஆதலால்தான் இக்காட்சிகளுக்கும் செயல்களுக்கும் இடம் தரக்கூடிய முறையில் கவிதையின் பொருள். அமையுமானால் அது பின்னும் சிறப்புடையதாக இலங்குகிறது. குண்டுசியைப்பற்றி எழுகிற கவிதை மேலே கூறிய சந்தர்ப்பங்களின் மையால் சிறக்க முடியாது. கோவலனுடைய சரிதையைக் கூறுகிற கவிதையில் சந்தர்ப்பங்கள் நிரம்ப இருப்பதால் கவிதையின் ஆழமும் பரப்பும் நன்கு வெளிப்பட முடிகிறது. ஆகவே எந்தப் பொருளைப்பற்றிக் கவிதை தோன்றுகிறதோ அந்தப் பொருள் கவிதை சிறப்படைவதற்கு மிகவும் உதவுகிறது என்பது வெளிப் படை. ஆனால் கோவலன் கதையைக்கூட எடுத்துக்கொண்டு ஒரு மட்டம்ான கவிஞன் தாழ்ந்த செய்யுளை இயற்றலாம். குண்டுசி யைக்கூட ஆதாரமாக வைத்துக்கொண்டு சிறந்த கவிஞன் உயர்ந்த கவிதையை ஆக்குவான். அப்படிப்பட்ட கவிதைகளை நாம் படித் தால் நம்மையும் அறியாது, "குண்டூசியைப்பற்றி எழுந்த கவிதை தான் இது, ஆனாலும் சொல்லப்பட்ட விஷ்யம் குண்டுசியோடு நின்றுவிடவில்லை' என்று கூறுகிறோம். "م. தமிழ்க்கவிதை பெரும்பாலும் தமிழில் தோன்றிய இலக்கியங்கள் மனித வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தோன்றியவை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/245&oldid=751063" இலிருந்து மீள்விக்கப்பட்டது