பக்கம்:இலக்கியக் கலை.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குண்டுகியும் குமரி முனையும் 227 மனித வாழ்வையே அகம் புறம் என்று இருபிரிவாகப்பிரித்தனர். உணர்ச்சியை ஆதாரம்ாகக்கொண்டு தோன்றும் அகம்ே கவிதைகள் மிகுதியும் தோன்றுவதற்கு இடம் தந்தது. காரணம். மனித மனம் உணர்வில் தன்னை மறந்து ஈடுபடுவதற்கு ஏற்ற இடமாக அது காணப்பட்டமையேயாகும். புறத்தைப்பற்றிய பகுதிகள் இவ்வளவு உணர்ச்சி வசப்படக்கூடியவை அல்ல. ஆகவே அப்பகுதியில் தோன்றியவை அனைத்தும் கவிதைகள் என்று சொல்லும் தரத்தன அல்ல. அவற்றுள்ளும் சிலவற்றைப்பற்றிச் சிறந்த கவிதைகள் தோன்றியுள்ளன என்றால் அதன் காரணம் அப்பொருளில் இல்லை; அப்பொருளை அடிப்படையில் வைத்துக்கொண்டு அவன் தனது கற்பனையின் உதவியால் வேறு ஒரு பொருளாக மாற்றி விட்டான். அப்பாடல்களைப் படித்தவுடன் நாம் கவிதைக்குரிய பொருள் அங்கு இல்லை என்று முதலில் உணருவதில்லை. கவிதையை அநுபவித்த பிறகே அதில் கூறப்பட்ட பொருளை ஆராய்ந்து பார்க்கிறோம். பொருள் கவிதைக்கு ஏற்றதன்று என்றும் அறிகிறோம். "சிறியகட்பெறினே எமக்குஈயும் மன்னே பெரியகட் பெறினே யாம்பாடத் தான்மகிழ்ந்து உண்ணும் மன்னே." (புறம்-235) இவ்வரிகளைப் படித்தவுடன் இக்காட்சி மனத்தில் தோன்று கிறது. அநுபவித்துவிட்டுப் பிறகு கூறப்பட்ட பொருள் என்ன வென்று ஆராய்கிறோம். பொருள் ஒன்றும் சிறந்ததன்று என்பதையும் அறிகிறோம். ஆனால் ஒளவையார் அதனைத் தமது சொல்வன்மையால் சிறந்ததாக ஆக்கி விட்டார். இதன் பின்னர் வருகிற பகுதி கவிதைக்கு ஏற்ற பொருள். அதிகமான் நெடுமான் அஞ்சி அழிந்தமையால் உண்டான ஆறாத் துயரத்திற்கு வடிவு கொடுக்கிறார் கவிஞர் எனவே சிறந்த அக்கவிதைப் பகுதிக்கு முகவுரையாக அமைந்துள்ள இவ்வடிகளும் கவிதைக் தன்மை பெற்றே விளங்குகின்றன. , எதைப்பற்றியும் சிறந்த கவிதை தோன்றலாம்; என்பதும், சிற்ந்த ப்ொருள்கள் நல்ல கவிதை தோன்றுவதற்கு மிகவும் அதிகமான சந்தர்ப்பங்களை அளிக்கின்றன என்பதும், கவிதைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/246&oldid=751064" இலிருந்து மீள்விக்கப்பட்டது