பக்கம்:இலக்கியக் கலை.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதை உண்மை 283 முடிவுக்கு வரக்கூடாது. எண்ணிக்கையினால் முடிவு செய்ங்க் சூடியவை அல்ல. இவை. தினசரி வாழ்க்கையில் நாம் கானும் நிக்ழ்ச்சிகள், நம்மைப் போன்ற சாதாரண் மனிதர் செய்பவை. அதற்கேற்ற அநுபவத்தையே நாம் அந்த நிகழ்ச்சிகளில், பெறுகிறோம். ஆனால் கவிதையில், காணப்படும் மனிதர்கள் நம்மைப் போன்ற சாதாரண இயல்பு படைத்தவர்கள் அல்லர். அவர்கள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நடந்துகொள்ளும் முறையை, நமது வாழ்க்கையில் வைத்து எண்ணிப் பார்த்து இது உண்மையா எனக் காண முற்படுவது தவறாக முடியும். கம்ப நாடனுடைய இராமாயணத்தில் கூறப்பட்ட அனைத்துச் செய்திகளும் மெய்ம்மையன்று. ஆனால் உண்மை. இராவணன், என்ற ஒருவன் பத்துத்தலைகளுடன் வாழ்ந்ததாகக் கம்பன் கூறுவது. ஜெப்ம்மையன்று. ஆனால் ஒரு தலையுள்ள மனிதனிடம் உள்ள அகங்காரத்தையும், அறிவையும் போலப் பத்து மடங்குடைய ஒருவனைப்பற்றிக் கூறுவதானால் எவ்வாறு கூறுவது? என்னையே. நோக்கி நான் இந்நெடும்பகை தேடிக்கொண்டேன்' என்று இந்திரசித்தனையே பார்த்துக் கூறும் அகங்காரம் உடையவனை எவ்வாறு குறிப்பது? பத்துத்தலையுடைய இராவணன் மெய்ம்மையன்று. ஆனால் உண்மைதான். என்றும் அழியாதது உண்மை எனில், இந்த மனப்பான்மை என்றும் உள்ளதுதானே. எனவே கவிஞன் கூறுவன அனைத்தும் உண்மை என்று கூறுகிறோம். இராவணர்கள் அன்றும் உள்ளனர். இன்றும் உள்ளனர்; என்றும், இருப்பர். ஆகலின் கம்பன் கூறிய இராவணன் உண்மையில் இருந்தானா எனில் ஆம் என்றே கூறல்வேண்டும்; மெய்ம்மையாக இருந்தானா என்றால் இல்லை எனலாம். கண்ணகி ஆய்ச்சியரிடையே இருக்கிறாள். குரவைக்கத்து: நடைபெறுகிறது. இந்நிலையில் அவள் கணவன் கொலையுண்ட செய்தி அவளுக்கு எட்டுகிறது. உடனே அவள் என்ன செய்திருக்கக் கூடும் என்று நாம் எதிர்பார்ப்போம்? ஒடிச் சென்று இறந்த கணவன் உடலைத் தழுவி அழுதிருத்தல் கூடும். இது சாதாரணமான ஒரு பெண் செய்யக் கூடியதாகும். இந்த அநுடிவத்தை மட்டும். வைத்துக்கொண்டு கண்ணகி செய்ததாக ஆசிரியர் கூறுவதைக் கண்பால், இது நடக்குமா என்ற ஐயந்தான் தோன்றும். செயற்கரிய செய்தவள் ஆகலின் கண்ணகி கண்லுன் இறந்ததற்கு, வருந்தவில்லை, ஆனால் அவன் கள்வன் என்று பெயர் வாங்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/252&oldid=751071" இலிருந்து மீள்விக்கப்பட்டது