பக்கம்:இலக்கியக் கலை.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ខ័ន្ធ័ இலக்கியக் கலை அத்தகைய ஒரு சந்தர்ப்பம் வந்துவிட்டது. கவிஞன் எவ்வளவு அழகாக அதனைச் சமாளிக்கிறான்? அரிஸ்டாடில் கூறிய இரண்டையும் கவிஞன் மேற்கொள்ளுகிறான். வாலி இராமன் மேல் கொண்டிருந்த மதிப்பையும் அவன் வீரத்தை உணர்ந்து அடைந்த வியப்பையும் கவிஞன் விரிவாகக் கூறுகிறான். அம்முகம்ாகவே அறிவுக்குப் பொருத்தமற்ற இந்தச் செயலையும் கண்டிக்கிறான். கதையின் போக்கிலும் கவிதையின் அழகிலும் நம்மை மிகுதியும் இப்பகுதிகள் ஈடுபடுத்துகின்றன. அறிவளவில் நின்று_ஆராந்தால் தவறானது என்றே கூறக்கூடிய இச்செயலை மதிப்பும் வியப்பும் ஒரளவு அமைதியடையச் செய்துவிடுகின்றன. மேற்கூறியவற்றிலிருந்து சில உண்மைகள் தெற்றென் விளங்கும். கவிதையில் மெய்ம்மை அல்லது உண்மை என்பது நிகழ்ச்சி முறையில் உள்ள உண்மை அல்லது மெய்ம்மையோடு மாறுபட்டது. என்பதை மீறத்தலாகாது. நமது தினசரி அநுப வத்தில் நட்வாதனவும், அவ்வநுபவத்துள் அடங்காதனவும், நட்க்கவ்ே முடியாதனவுமாகிய பல பொருள்கள் கவிதை யுலகில் மெய்ம்மையாகவும் உண்மையாகவும் கொள்ளப் படலாம். நாம் உண்மைகள் என்று கூறுவன்வற்றைக் கர்ட்டிலும் அவை மிகவும் ஆழமான உண்மைகள் இந்த ஆழமான உண்மைகளே கவிதை புனைவதற்கு ஏற்ற நல்ல சரக்குகள், இது கருதியே போலும் "வீலர் என்ற பெரியார், என்றும் எங்கும் மன்னாதது யாதோ அது என்றும் பழமைப் ப்டாது' என்று கூறிப்போனார். * . . . . . . . . . . . " ' ..., மேலும் கவிதை என்பது நிகழ்ச்சி முறையை அப்படியே எடுத்துக்கூறும் பஞ்சாங்கம் அன்று. மனித அநுபவத்தில் நட்க்கக்கூடர்த்னவர்க இருப்பினும் முடியக் கூடியவற்றை அழகுபடக் கூறுவதே கவிதையின் நோக்கம். காரண் காரியத் தொடர்புபடுத்தி நம்மால் காண்முடியாத எவ்வளவோ உண்மைகள் உலகிடையே உள்ளன. உலகச் சட்ட திட்டங் களால் கட்டுப்பெற்று நிற்கும் நாம் அவற்றின் உண்மையை ஆராய்ந்து காணல் இயலாது. கண்டாலும் அவை அநுபவத்தில் வருதல் இயலாத காரியம். இப்படிப்பட்ட உண்மைகளையே அடிப்படையாகக்கொண்டு கவிதை தோன்றுகிறது. ; , , , ." - கவிதையில் உண்மை என்பது. நாம் கானும் இவ்வுலக உண்மைக்கு அப்பாற்பட்டதாகவும் இருக்கலாம். என்பதை நன்கு விளங்கிக்கொண்டால் பின்னர் ஒரு காவியத்தையோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/257&oldid=751076" இலிருந்து மீள்விக்கப்பட்டது