பக்கம்:இலக்கியக் கலை.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமையின் கதை 243 ஒப்புமைப்படுத்திக் கூறுவதாகும். இவ்வொப்புமை காரணமாகப் பொருள்களின் உள்ள்ே திகழும் தொடர்பை ஆராய்வதும் கவிதை பின் வேலைதான். தொடர்பு காரணமாகப் பொருள்களுள் ஒப்புமை ஏற்பட்டதா? அன்றி ஒப்புமை காரணமாகத் தொடர்பு ஏற்பட்டதா? என்பதை இன்னும் உளநூலார் ஆய்ந்து முடிவு கூறவில்லை, அது எவ்வாறாயினும் கவிஞன் இவ்விரண்டை பும் உணர்ந்து பயன்படுத்துகிற்ான். தொடர்பு பற்றி ஒப்புமை கர்ண்பலை விட்டுவிட்டுக் கவிஞன், வேறு பல காரணங்கள் பற்றித் தோன்றும் ஒப்புமையை மட்டும் மிகுதியும் கையாளுகிறான். இங்ங்னம் ஒப்புமை காணும் இடத்திலேயே கற்பனை மிகுதியாக விளங்குகிறது. . . . . . . . . பொருள்களின் ஒப்புமையைக் கண்டு அநுபவிக்கும் இயல்பு கற்பனையில் அடங்குகிறதர்கலின், அவ்வொப்புமையைக் காண் பதற்கு எல்லை வகுப்பது கடினமாகிறது. எனவே ஒப்புமை செய்யப்படும் பொருள்கள் இரண்டை எடுத்துக் கொண்டு, எக்காரணம் பற்றி இவை ஒப்புமை செய்யப் பெற்றன என்று ஆராய்ந்தால், ஏதோ ஒரு பண்பு பற்றி மட்டும். செய்யப் வட்டிருப்பதை அறியலாம். முற்றும் வேறு பட்டதாகக் காணப்படும் இரண்டுபொருள்களில், ஓர் இயல்பு மட்டும் இரண்டுக்கும் பொது வாக அமைந்துவிடும்ாயின் அதுவே போதுமானது. இதுபற்றியே தமிழில் ஒருபுடை ஒத்துப் பல்புடை ஒவ்வாமையுடைய பெர்ருள்கள்ே உவமிக்க்ப்ப்டும் தன்மையுடையன் எனக் கூறப் - - - فشلتينثياتتين "பெருஞ்செல்வர் இல்லத்து நல்கூர்ந்தார் போல வருஞ்செல்லும் பேரும் என்நெஞ்சு" (முத்தொள்: 88) என்ற இவ்வழகிய முத்தொள்ளாயிரப் பர்ட்லில் பணக்காரர் வீட்டில் அவர்களைக் காணச் சென்ற வறியவர், கதவு அடைத் திருப்பதைக் கண்டு, தட்டித் திறக்க மனோதிடம் இன்றியும், வெறுங் கையோடு திரும்பிவிட விருப்பம் இன்றியும், போவதும் வருவதுமாயிருக்கும் இயல்பு, தலைவனைக் காணச்சென்று திரும்பும் தன் நெஞ்சுக்கு உவமையாகத் தலைவியால் கூறப் படுகிறது. வெட்சித்தோடு ப்ோவதும் வருவதுமாயிருக்கும் இயல்பே இங்கே தலைவியின் நெஞ்சின், செய்லுக்கும் வறியவர் ச்ெயலுக்கும் ஒப்புமை செய்யப்ப்டுகிறது. இங்ங்ணம், கவிஞன் உவமை செய்ன்க். உவமிக்கப்படும் பொருள் க ைள நம், மனக்கண்ண்ால் க்ாணாமல் உள்ளத்தில் உணருமாறு செய்கிறான். இப்பொருள்களில் உள்ள ஒப்புமைப் பகுதியை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/262&oldid=751082" இலிருந்து மீள்விக்கப்பட்டது